Ad Code

அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே | Antho Kalvaariyil | Lent Songs


   அந்தோ கல்வாரியில் அருமை ரட்சகரே
   சிறுமை அடைந்தே தொங்குறார்

1.மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமை குருசைத்தெரிந்தெடுத்தாரே
மாயலோகத்தோடழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே

2.அழ்குமில்லை சௌந்தரியமில்லை
அந்த்க் கேடுற்றார் எந்த்னைமீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே

3.முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்க்ள் ஆணிகள் பாய்ந்தும்
குருதி வடிந்தவர் தொங்கினார்
வருந்தி மடிவோரை மீட்டிடவே 

4.அதிசயம் இது இயேசுவின் தியாகம்
அதிலும் இன்பம் அன்பரின் தியாகம்
அதை எண்ணியே நிதம் வாழுவேன்
அவர் பாதையை நான் தொடர்ந்திடவே

5.சிலுவைக் காட்சியைக் கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னை சேர்த்திட வருவேனென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்.

Post a Comment

0 Comments