விந்தை கிறிஸ்தேசு ராஜா
உந்தன் சிலுவையென் மேன்மை
சுந்தரமிகும் இந்த ப்புவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும்....
1.திரண்ட ஆஸ்தி உயர்ந்த கல்வி
செல்வாக்குகல் எனக்கிருப்பினும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமைகள் யாவும் அற்பமே.
2.உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம்வ்ற்றா ஜீவ நதியாம்
துங்க இரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மையடைந்தே மேன்மையாகினேன்
3.சென்னி விலா கைகானின்று
சிந்துதோ துயரோடன்பு
மன்னா இதைப் போன்ற காட்சி
எந்நாளிலுமே எங்கும் காணேன்
4.இந்த விந்தை அன்புக்கீடாய்
என்ன் காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும்பொருள் ஈடாகும்?
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன்.
0 Comments