(இராகம்: பாலர் ஞாயிறிது பாசமாய்)
கும்பிட்டு இயேசுநாமம் பணிந்து போற்றும்
தாலந்தைப் புதைத்திடாமல், தாமதமே பண்ணிடாமல்,
மறிமீது பவனிவந்த ஸ்வாமிஇயேசு அன்பைஎண்ணிக்
1. யாரும் அமராத கழுதை மீதிலே
சாந்த குணம்உள்ள ராஜா சென்றாரே
பாரில் ஜோதி வீசுகின்ற இயேசு பவனி சென்றாரே
ஊரில் எங்கும் அவர்புகழ் ஓதும் மக்கள்கூட்டம் கண்டோம்.
2. பன்னிரண்டு சீஷர் வஸ்திரம் தந்தாரே
இன்னும் மக்களும் விரித்தனரே
தாவீதின் மகனுக்கு ஓசன்னா என்றுசொல்லிப் போற்றும்
தரணி எங்கும் அவர்புகழ் ஓதும் மக்கள்கூட்டம் கண்டோம்.
3. குருத்தோலை ஞாயிற்றிலே பவனி செல்வோம்
குருவின் அன்பின் பாதம் பணியகற்போம்
கூடிஅரில் பெற்று நாமும் திரியேகரைப் போற்றுவோம்
எண்ணிமுடியா நன்மையை ஏகமாக எண்ணிக் கொண்டு.
0 Comments