(இராகம்: கல்யாணமாம் கல்யாணம்)
கொண்டாட்டமாம் கொண்டாட்டம்
எருசலேமில் கொண்டாட்டம்
கர்த்தன் இயேசு பணிவுடனே
உலா வந்த கொண்டாட்டம்
1. கர்த்தரின் நாமத்தில்
வந்திட்ட இயேசுவுக்கு (ஆ..ஆ..)
உன்னதத்தில் ஓசன்னா
என்று சொல்லி போற்றினர்.
2. பரலோகத்தில் சமாதானம்
உன்னதத்தில் மகிமையே (ஆ..ஆ..)
உண்டாகவே என்று சொல்லி
இறைனையே புகழ்ந்தனர்.
3. பவனி வந்த பாதையில்
கண்ணீர் விட்ட இயேசுவும் (ஆ..ஆ..)
சமாதான வழியை
மக்களறிய விரும்பினார்.
0 Comments