இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். அருளும் அமைதியும் உங்களோடிருப்பதாக. அதிசயங்களை செய்கிற ஆண்டவர், செய்யக் கூடாத அதிசயங்களை செய்கிறவர் என்று திருமறை சொல்லுகிறது. அதைக் குறித்து எரேமியா 32 ஆம் அதிகாரத்திலிருந்து தியானிப்போம்.
"எரேமியா 32. 17 எரேமியா: உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை. 27 இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?"
பின்னணி
தென்னாடான யூத நாட்டில் கடைசி அரசரான சிதேக்கியாவின் பத்தாம் வருஷத்தில், நேபுகாத்நேசாரின் பதினெட்டாம் ஆண்டில், பாபிலோனியர்கள் எருசலேமை முற்றுகை போட்டிருந்தார்கள். கர்த்தர் யூதாவை ஒப்புக்கொடுப்பார் என்றுரைத்தற்காக சிதேக்கியா எரேமியாவை காவலில் வைத்தான்.
கடவுள் தனக்கு சொன்னப்படி, எரேமியா தன் பெரியப்பா மகனாகிய அனாமெயேலுக்கு பென்யமீன் நாட்டில் ஆனதோத்திலுள்ள நிலத்தை 17 சேக்கல் வெள்ளிக்கு வாங்கினார். அதன் கிரயப்பத்திரத்தை எல்லாருடைய கண்களுக்கு முன்பாக பாரூக் என்பவரிடம் கொடுத்து, அவை அநேக நாட்கள் இருக்குமாறு ஒரு மன்பாண்டத்தில் வைத்து வைக்க சொன்னார். இந்நாட்டில் வீடுகளும் நிலங்களும் திராட்சைத் தோட்டங்களும் மீண்டும் விலைக்கு வாங்கப்படும் என்று அடையாளமாக தீர்க்கதரிசனமுரைத்தார்.
அப்போது எரேமியா கடவுளிடம் எகிப்தின் அனுபவத்தை சொல்லி ஜெபிக்கிறார். அப்போது எரேமியாவுக்கு உண்டான ஆண்டவரின் வாக்கில் தண்டனைக்கான காரணத்தையும், மீட்புக்கான நம்பிக்கையையும் காண முடிகிறது. அதில், எரேமியா மன்றாடிய போது (எரே 32.17), பயன்படுத்திய சொற்றொடரே, கடவுளின் மறுமொழியிலும் (எரே 32.27) இடம்பெறுகிறது.
எரேமியா 32 இன் உட்பிரிவுகள்:
1. எரேமியா நிலம் வாங்குதல் 32.1 - 15
2. எரேமியாவின் விண்ணப்பம் 32.16 - 25
3. கடவுளின் விடுதலை வாக்குறுதி 32.26-44
1️⃣கடவுள் என்ன செய்கிறார்?
1. யூதாவின் தண்டனை
Destruction of Judah
தந்தைக்கும் பிள்ளைக்கும் இருக்கிற உறவு போல் வழிநடத்திய யாவே கடவுளை யூத மக்கள் விட்டு விட்டு வீணான வழியில் சோரம்போனார்கள். ஆகவே அவர்களை கல்தேயருடைய கையில் ஒப்புக்கொடுத்தார். 70 ஆண்டு கால பாபிலோனிய சிறையிருப்பின் தண்டனையை பெற்றார்கள்.
2. யூதாவின் மறுகட்டமைப்பு
Restoration of Judah
அன்பான இறைவன் யூத மக்களுக்கு ஒரு தருணத்தை கொடுத்தார். அவர்கள் தங்கள் வழிகளை சீர்துக்கிப்பார்த்து, மனந்திரும்பினால் மீண்டும் யூத நாட்டிற்கு வர முடியும் என்ற வாக்குறுதி கிடைத்தது
3. புதிய உடன்படிக்கை நிறுவுதல்
Establishment of the New Covenant
கடவுள் என்றும் நிலைத்திருக்கும் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். ஒரே இதயத்தையும் ஒரே நெறிமுறையையும் கொடுக்கப்படும் என்று கடவுள் வாக்கு கொடுக்கிறார்.
2️⃣நாம் என்ன செய்யவேண்டும்?
1. இறைவனுக்குக் கீழ்படிய வேண்டும்.
2. இறைவாக்கைப் பற்றிக்கொள்ள வேண்டும்.
3. இறைகாலத்திற்கு காத்திருக்க வேண்டும்
3️⃣அதிசயம் எப்படியிருக்கும்?
1. மனிதரால் கூடாத அதிசயம் (Can not)
2. கடினமான அதிசயம் (Hard)
3. நிகரற்ற அதிசயம் (Incomparable)
வேதம் சொல்லுகிறது: மனிதரால் கூடாதவைகள் கடவுளால் கூடும். இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கையில் செய்யக்கூடாத அதிசயங்களை செய்த இறைவன் உங்கள் வாழ்விலும் செய்வாராக. ஆமென்.
Preached by
Meyego
@ Tamil Fellowship,
Serampore College
01.03.2022
0 Comments