Ad Code

19. சிலுவையும் சீடத்துவமும் | Cross and the Discipleship | லூக்கா 9.62 Luke

தியானம் : 19 / 03.04.2922
தலைப்பு : சிலுவையும் சீடத்துவமும்
திருவசனம் : லூக்கா 9.62 அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.

பின்னணி
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். லூக்கா 9.57 முதல் 61 வசனங்களில் "சீஷத்துவதிற்கான தெரிவு செய்தல்" என்னும் கருத்தின் அடிப்படையில் மூன்று விதமான மனிதர்களை பார்க்க முடிகிறது. இவற்றின் கருப்பொருளை தான் லூக்கா 9.62 இல் இயேசு சுருக்கமாக சொல்லியுள்ளார். கலப்பை உழவனுக்கு அவசியம் போல், சிலுவையின்றி சீடத்துவம் இல்லை என்பேன்.

தியானம்
சிலுவையும் சீடத்துவமும் ஒருங்கே கற்றுத்தரும் மூன்று பாடங்கள்....

1. பற்றுறுதியான அர்ப்பணிப்பு
சேற்றில் கால் வைத்து, நாற்று நட்டால் மட்டும் போதாது. முழுமையான நம்பிக்கையோடு அர்ப்பணிப்பு இருந்தால் மட்டுமே நல்ல அறுவடை எடுக்க முடியும். அது போல் சீடத்துவமும்....

2. பாடுகளை சகிக்கும் உழைப்பு
வயலில் மழையில் நனையாமல் அல்லது வெயிலில் வாடாமல் உழைக்க முடியாது. பிரச்சினைகள் மற்றும் பாடுகள் இல்லாமல் அறுவடை இல்லை. அது போல் சீடத்துவமும்....

3. பின்னிட்டு பாராத வாழ்வு
நிலத்தில் விதைத்து விட்டு, அதைத் தொடர்ந்து கவனிக்காமல் இருந்தால் பயிர்கள் வாடிப்போய் விடும். நம்பிக்கை இல்லாமல், இடையிலையே விட்டு விட்டால் அறுவடையை அனுபவிக்க இயலாது. அது போல் சீடத்துவமும்....

சிந்தனைக்கு...
அழைப்பு அர்ப்பணிப்பு  ஆகிய இரண்டும் ஒருசேர சேர்ந்ததே சீடத்துவ தகுதி. இறையழைப்பு இல்லாமல், மனித அர்ப்பணிப்பால் பயனில்லை (லூக் 9.57-58). இறையழைப்பு இருந்தால், எந்த நிலையெனினும் அர்ப்பணம் வேண்டும் (லூக் 9.59-60). சரியான இறையழைப்பும் அர்ப்பணமும் இல்லாத சுயநிலை கூடாது (லூக் 9.61). ஆகவே சிலுவையைத் தோளில் வைத்தப் பின்பு, யாருக்காகவும் இறக்கி வைக்கக்கூடாது. அதுவே கடவுளின் மகிழ்ச்சியைத் தரும். இறையாசி உங்களோடிருப்பதாக.


Prepared by

Meyego

Post a Comment

0 Comments