Ad Code

22. பெலப்படுத்தும் உயிர்த்தெழுந்த ஆண்டவர் | Empowered by the Resurrected Lord | பிலிப்பியர் 4.13 Philippians

தியானம் : 22 / 24.04.2022 
தலைப்பு : பெலப்படுத்தும் உயிர்த்தெழுந்த ஆண்டவர்
திருவசனம் : பிலிப்பியர் 4.13
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே, எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு. 

முகவுரை
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தது சாதாரண காரியமல்ல; அந்த அதிசயம் அதை நம்புவோருக்கு புது பெலனைக் கொடுக்கவல்லது. உதாரணமாக, பயந்துபோய் ஒளிந்து கிடந்த சீடர்களுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது இயேசுவின் உயர்த்தெழுதலே. அதோடு நின்றுவிடவில்லை. சிறைச்சாலையில் கிறிஸ்துவுக்காக பவுலடிகளாரும் இயேசுவின் பெலப்படுத்துதலை அனுபவித்து சொன்னது தான் இந்த வசனமே. ஏன், இன்று வரை அநேக சான்றுகளை சொல்ல முடியும்.

1. இறை பெலனே நிரந்தரம்
கிறிஸ்துவினுடைய பெலமே என்னுடைய பெலன் என்று பவுல் இங்கு சொல்லுகிறார். ஆம் நம்முடைய சுய பலத்தால் எதையும் செய்துவிட முடியாது. நம் சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது. நமக்கு ஜீவனையும் பெலத்தையும் கொடுப்பவர் கடவுள் என்பதை உணர்ந்துக் கொண்டு அவரை சார்ந்து வாழ வேண்டும். அதுவே நிரந்தரம்.

2. இறை பெலத்தை நாடுவோம்
இறை பெலத்தை பெறுவது எப்படி? நம் சுயத்தை விட்டு விட்டு கடவுளின் பெலத்தை நாடுவதே சிறந்த வழி. சீடர்கள் துன்புறுத்தப்பட்ட போது, (அப்போஸ்தலர் 4.24-30) செய்த ஒருமித்த இறைவேண்டலில், ஆண்டவருடைய பெலத்திற்காக மன்றாடியதைக் காண முடியும். தம் பரிசுத்த ஆவியானவரால் நம்மை பெலப்படுத்த கடவுள் வாஞ்சையும் வல்லமையும் உள்ளவராயிருக்கிறார்.

3. இறை பெலத்தை பயனாக்குவோம்
பவுல் இங்கு சொல்வது: "எல்லாவற்றையும் செய்ய." இறை பெலம் நமக்கு விருதுவாக இல்லை. அதை அவருடைய நாம மகிமைக்காக பயன்படுத்த வேண்டும். கடவுள் கிதியோனுக்கு கொடுத்த அந்த பெலன் இஸ்ரவேலரின் விடுதலைக்கேதுவாக, பயன்பட்டது.

நிறைவுரை
திருமறை சொல்லுகிறது: (ஏசாயா 40:29 & 31) சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்... கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். இறை பாதத்தில் காத்திருப்போம், இறை பெலனை பெற்றுக் கொள்ளுவோம். அந்த புதிய பெலத்தோடு இறைப்பணி செய்வோம். இறையாசி உங்களோடிருப்பதாக.

Post a Comment

0 Comments