எந்த வாசல் வேண்டும்?
அ. யோசுவா ராபின்சன் B.A, மாங்குளம், கோடன்குளம் சேகரம், CSI திருநெல்வேலி திருமண்டலம்
BD - 1, செராம்பூர் கல்லூரி, செராம்பூர்.
click here to download pdf of Meditation 36
தியான பகுதி மத்தேயு 7.13-14 “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்கு போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதை கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.”
முகவுரை
இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி ஊழியத்தில் முக்கிய பங்கு வகிக்கக் கூடிய மலை பிரசங்கத்தில் மனிதர்கள் இறையரசிற்குள் பிரவேசிக்க எந்த வாசல் சரியானது என்று கற்றுக்கொடுக்கிறார். மனிதனாக பிறந்த அனைவரும் இந்த பூமியில், மரணமோ, மறுமையோ, முடிவை சந்தித்தே ஆக வேண்டும் இந்த உலகம் நமக்கு சொந்தம் கிடையாது எபிரெயற்கு எழுதிய நிருபத்தில் இவ்வாறு கூறப்படுள்ளது, “நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை வரபோகின்ற நிலையான நகரத்தை நாடித் தேடுகிறோம்” (எபிரெயர் 13: 14) அந்த நிலையான நகரத்தில் வாழ அதாவது மரணத்திற்கு பின்பு உள்ள வாழ்க்கையில் பரலோக ராஜ்யத்தில் வாழ என்ன செய்யவேண்டும் என்று ஆண்டவர் தெளிவாக வேதத்தில் கூறியுள்ளார்.
இடுக்கமான வாசல் Vs விசாலமான வாசல்
இடுக்கமான வாசல்க் (Narrow Gate) வழியாக பிரவேசிக்க வேண்டும் என்று ஆண்டவர் கூறுகிறார். நாம் வாழ்கின்ற இந்த உலக வாழ்க்கையில் பல தீமைகள் நிறைந்து காணப்படுகின்றது. அந்த பாவ செயல்களை செய்யாமல் ஆண்டவர் விரும்புகின்ற வழியில் அதாவது ‘பரிசுத்த வழியில்’ நடந்தால் நாம் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும்.
கேட்டுக்கு போகின்ற வாசல் வழி விசாலமாக (Wide Gate) இருப்பதாக ஆண்டவர் கூறுகிறார், உலக வாழ்கையில் நாம் எப்படி வேண்டும் என்றாலும் நாம் வாழலாம். நாம் எந்த பாவ காரியத்தை வேண்டும் என்றாலும் சுலபமாக செய்யலாம். அதை போல தான் உலக வாழ்க்கையில் நாம் பாவம் செய்கின்ற பொழுது சில நேரங்களில் நமக்கு தவறு என்று தெரிந்தும் அந்த நிரந்தரமில்லாத காரியத்தை செய்வோம்.
முடிவு உங்கள் முடிவில்...
“பரலோகம் செல்ல பாதை உண்டு பயன்படுத்துவோர் இல்லை;
நரகத்திற்கு நுழைவு வாயிலே இல்லை. அதில் ஏறிக்குதிப்பவர்கள் அநேகர்.” இதேபோல் இடுக்கமான பாதை கடினமானது என்று புறம்பேதள்ளி விசாலமான இன்பமான பாதையைத் தேர்ந்தெடுத்து தங்கள் வாழ்க்கையை தொலைப்பவர்கள் அநேகர். கிறிஸ்தவ வாழ்க்கை கடினமாக தோன்றலாம். ஆனால் முடிவில் நித்திய ஆனந்தம் உண்டு. இன்று கிறிஸ்தவத்தில் ஆடம்பரத்தை சொகுசை எதிர்பார்த்து கடவுள் நமக்கு வைத்திருக்கும் பரம ஆனந்தத்தை இழக்கிறோம். கடினத்தில் கடவுளின் உதவிக்கரம் நம்மைத் தாங்குவதை நம்மால் உணரமுடியும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பல தியாகங்கள் செய்துள்ளார் தமது உயிரையே தந்துள்ளார் அந்த நன்றியறிதலுள்ளவர்களாக நாம் வாழ வேண்டும். ஆண்டவரின் விருப்பம் நாம் இடுக்கமான வாசல் வழியாகிய பரிசுத்தத்தின் பாதையில் பயணிக்க வேண்டும். ஆதலால் இயேசு கிறிஸ்துவின் கட்டளை படி இடுக்கமான வாசல் வழியில் பிரவேசிப்போம். மண்ணிற்காக மாணிக்கத்தை விட்டுவிடாதிருப்போமாக. மரியாளை போல (லூக்கா 10 ; 42) நாமும் நல்ல பங்கை தெரிந்துக்கொள்ள நம் ஒவவொருவருக்கும் ஆண்டவர் தாமே உதவி செய்வராக, ஆமென்.
0 Comments