Ad Code

39. இருவகை அடிதளங்கள் | ஜா.சைலஸ் | Two Basements | மத்தேயு 7.24 - 27 Matthew

இருவகை அடித்தளங்கள்

ஜா. சைலஸ் B.A     (BD – 1)                    பிள்ளைகுளம், கரிசல்பட்டி சேகரம், CSI திருநெல்வேலி திருமண்டலம்

பெத்தேல் வேதாகம கல்லூரி, குண்டூர்.          

click here to download pdf of Meditation 39

தியானப் பகுதி:  மத்தேயு 7: 24-27

24ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். 25பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை, ஏன்னென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. 26நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். 27பெருமழை சொரிந்தது, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது, விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

 

முகவுரை

இருவகை அடித்தளங்களை பற்றி மத்தேயு எழுதின சுவிசேஷம் 7.24 முதல் 27 வரை இயேசு கிறிஸ்து தெளிவாக சொல்கின்றார். ஆண்டவருடைய வார்த்தைகளை கேட்டு நடக்கிறவர்கள் கன்மலை மேல் வீட்டைக் கட்டி புத்தியுள்ளவர்களாகக் காணப்படுகிறார்கள். ஆனால் இறை வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடக்காமல் தங்கள் மனம் போன போக்கில் போகின்றவர்கள், மணலின் மேல் வீடு கட்டி அதினுடைய அழிவை காண்கின்றவர்களாக கருதப்படுகின்றனர்.

 

அதுமட்டுமல்லாமல் ஆண்டவர் கொடுத்திருக்கிற இயற்கை இதற்கு சாட்சியாக அமைகின்றது. இறைவார்த்தைக்கு இயற்கை கட்டுப்படுகிறது என்பதை இயேசு கிறிஸ்து (மாற்கு 4;37-39)  காற்றையும், கடலையும் அதட்டியதும் அமைதியான நிகழ்வினின்று அறிய முடியும். இந்த நிகழ்வினை பார்க்கும் பொழுது கிறிஸ்துவினுடைய வார்த்தைக்கு அப்பாற்பட்டு இயற்கை செயல்படுவதில்லை என்பது தெரிய வருகிறது. இயேசு கிறிஸ்து சொன்ன உவமையிலிருந்து தியானிப்போம்.

 

1. இறை வார்த்தையால் அடித்தளத்தை உறுதிப்படுத்துங்கள்

ஒரு வீட்டைக் கட்டுகின்றோமானால் அதற்கு வானம் (குழி) தோண்டுதல் மற்றும் அடித்தளத்தை கான்கிரீட் மூலமாக உறுதியாக போடுவதற்கு நாம் முயற்சி செய்வது வழக்கம். “முதல் கோணல் முற்றும் கோணல்என்ற பழமொழியை நம் நினைவில் கொண்டு வருவோம். நம்முடைய வாழ்விலே வெற்றி அடைய பொறுமை மிகவும் அவசியம்.

 

அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார் (1 கொரிந்தியர் 3:11-13): போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறெ அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும். நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியிலே வெளிப்படுத்தப்படும். அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.

 

2. இறைவார்த்தையை கேட்பதோடல்லாமல் வாழ்ந்து காட்டுங்கள்:

"கற்றுக்கொள்கிறவன் கிறிஸ்தவன்… கைக்கொள்கிறவனோ சீடன்.பேதுருவின் வாழ்விலிருந்து சில சிந்தனைகளை பார்ப்போமானால் கிறிஸ்து தன் ஊழியத்தைத் தொடங்கியவுடன் செய்த மிக முக்கியமான காரியம் தனக்கான சீடர்களைத் தெரிந்து கொண்டதுதான். அதில் பிரதானமானவர்களில் முதலானானவர் சீமோன் என்கிற பேதுரு. பேதுரு எவ்வாறு சீடனானார் ? இயேசு தன்னை அழைத்தவுடன் (மத்தேயு 19:20, அப்போஸ்தலர் 5:29) பேதுரு அனைத்தையும் விட்டு உடனடியாக இயேசுவைப்பின்பற்றிச் சென்றார். அவர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவை சரியாகக் கண்டு கொண்டு மகிமைப்படுத்தினார். மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் இறைவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது என்று தெளிவாக பிரசங்கித்தார். நம்மிடம் அதே கீழ்ப்படிதல் உண்டா?

 

கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கற்றுக் கொள்ள ஆர்வமாயிருந்த பேதுரு (மத்தேயு 15:15, லூக்கா 12:41) உவமைகளாகக் கிறிஸ்து சொன்ன சத்தியங்களை அவற்றின் மறைவான பொருட்களை அதிகமாய் அறிய விரும்பினார். இது தான் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு. இன்று சத்தியத்தை சரியாகக் கற்பதிலும் வேதத்தின் மகத்துவத்தை உணர்வதிலும் நமது ஆர்வம் எப்படி இருக்கிறது?

 

நிறைவுரை

உங்களில் எத்தனை பேர் மக்கள் செய்யும் அற்புதமான சாதனைகளைப் கேட்க விரும்புகிறீர்கள்? ஒரு விளையாட்டு வீரராக பந்தைப் பிடித்து, ஹோம் ரன் அடிப்பது; நடனக் கலைஞர் ஒரு அற்புதமான நடனத்தை கச்சிதமாக ஆடுவது மீனவர் மீன்களை பிடிப்பது, ஒரு வேட்டைக்காரன் ஒரு மானைப் பிடித்தல், ஒரு அற்புதமான கருவியை உருவாக்கி அதனை எல்லோருடைய பயன்பாட்டுக்கும் உதவுவது என சொல்லிக் கொண்டே போகலாம். மக்கள் இந்த அற்புதமான விஷயங்களைக் கண்டு ஆஹா!என்று வியப்புடையதக்கதான அறிவியல் வளர்ச்சி போன்ற காரியங்கள் முழுமை அடைந்தது என்று நாம் சொல்லிவிட முடியாது. அதே போல தான் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் முடிவு அடைந்தோம் என்று நாம் சொல்லிவிட முடியாது.

 

நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் (2தீமோ 4:7). என்று பவுலடிகளார் சொல்ல காரணம்: போடப்பட்ட சரியான அஸ்திபாரம் மற்றும் அதன்மீது நேர்த்தியாக கட்டியது என்று சொல்லமுடியும். ஆகவே நம் கண் முன்பாக இரண்டு அடித்தளங்கள் இருக்கிறது, ஒன்று கன்மலையின் மேல் கட்டப்பட்ட வீடு, மற்றொன்று மண் தரையின் மேல் கட்டப்பட்ட வீடு. இவற்றில் நாம் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்வோம்.

 

அப்போஸ்தலனாகிய யாக்கோபு சொல்லுகிறார் (யாக்கோபு 1:21-22): நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாமலும் நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்தரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.  ஆண்டவர் தம்முடைய புதிய கிருபையினால் ஒவ்வொரு நாளும் பெலப்படுத்தி நிலைநிறுத்துவாராக.


Post a Comment

0 Comments