Ad Code

நன்றியும் இந்திய இதயங்களும்| Don't Say Thanks & Sorry | நன்றி சொல்லாதே | Understanding the Gratitude of Indian and Western Culture


"என் பையன் எனக்கு ஏன் நன்றி சொல்லணும்?"
"ஏல நீ நன்றி சொல்வது எனக்கு கஷ்டமாயிருக்கு"
"ஏல நான் உன் நண்பேன்டா, எனட்ட ஏன் மன்னினு சொல்லுற"
என்ற சொற்றொடர்களை நம் அன்புக்குரியவர்களிடமிருந்து கேட்டிருப்போம் அல்லது நாமே சொல்லியிருப்போம்.

நன்றி (Thanks) மற்றும் மன்னிப்பு (Sorry) என்ற இரண்டு வார்த்தைகளின் முக்கியத்துவத்தையும் பயன்பாட்டையும் அனைவரும் அறிவோம். ஆனால் நம் இந்திய தேசத்திற்கும், அயல்நாடுகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. வார்த்தைகளுக்கும் கலாச்சாரத்திற்கும் தொடர்புண்டு. இந்தியர்களிடம் நன்றி சொல்லும் பழக்கம் யார் யாரை எந்தெந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்பதை பொறுத்து மாறுபடும். கடமையில் உதவுவதுக்கும், உறவோடு மனப்பூர்வமாக செய்வதற்கும் வித்தியாசத்தை காண்பிக்கும் கலாச்சாரம் இது.

நெருங்கிய உறவுகளிடையே (Closed Circle Relations) இந்த வார்த்தை பயன்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக இந்த Thanks & Sorry என்ற ஆங்கில வார்த்தைகளை தவிர்ப்பது இன்னும் அதிக நெருக்கத்தை கொண்டு வரும். ஏனென்றால் இந்த சொற்களை விட நெருங்கிய உறவுகளின் இதய உணர்வுகள் வலிமை வாய்ந்தவை. அன்புக்குரியவர்கள் (Closed Circle) தனது அன்புக்குரியவர்களிடமிருந்து நன்றியை எதிர்பாராது எதையும் செய்பவர்கள். நன்றி சொன்னால் இருவருக்குமிடையே சரியான புரிதலும் நெருக்குகமும் இல்லை என்ற கருத்துள்ளது. வார்த்தைகளைக் காட்டிலும் வாழ்வின் செயல்பாடுகள் முக்கியமானவை.

இந்திய கலாச்சாரத்தில், பல சைகைகள் (Gestures) அமைதியாக இருந்தாலும் அதிக புரிந்து கொள்ளுதல் இருக்கும். நம் செயல்கள் வார்த்தைகளை விட சத்தமாக இருக்க வேண்டும். அன்புக்குரியவர்கள் தாங்கள் செய்வது எப்படியும் தாங்கள் செய்ய விரும்பும் ஒரு பகுதி என்று நம்புகிறார்கள். எனவே அவர்கள் நன்றியை எதிர்பார்க்க மாட்டார்கள், சில சமயங்களில் நன்றி சொன்னதற்காக வருத்தப்படுவார்கள். நாம் இந்தியாவில் அடிக்கடி சொல்வோம், "எனக்கு நன்றி சொல்ல தேவையில்லை, நான் அதை செய்து மகிழ்ந்தேன்."  மேற்கத்திய கலாச்சாரத்தில், இதற்கு நேர்மாறாக, நன்றி கூறுவது பெரும்பாலும் பரிவர்த்தனையின் முடிவைக் குறிக்கிறது. அங்கு மக்கள் தங்கள் வீடுகள் அல்லது விருந்துகளுக்கு வந்தததற்கு கூட நன்றி தெரிவிக்கின்றனர். அவர்கள் கலாச்சாரபடி அவர்கள் மனதிற்கு அது திருபதி. அதற்காக இந்தியர்கள் நன்றியறிதல் அற்றவர்கள் என்றல்ல, மாறாக, உறவுக்கும் அதன் அன்பிற்கும் இதயப் பூர்வமாக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.

"In the West, saying thank you is routine.
In India, it can be insulting."

அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த இந்தியரான தீபக் சிங், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள ஒரு கண்கவர் நுணுக்கமான வித்தியாசத்தில் ஒரு குறுக்கு-கலாச்சார முன்னோக்கை அளிக்கிறார். இந்தியாவில், நன்றி என்று சொல்வது சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை, தவறான சூழலில் சொன்னால், அவமதிப்பு மற்றும் நேர்மையற்றதாக இருக்கலாம். நன்றி சொல்வது என்பது உறவின் நெருக்கத்தை மீறும் செயலாகும் என்பதால் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில், குடும்பத்தினர் சகோதரர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் ஆகியோர் ஒருவருக்கொருவர் வார்த்தைகளற்ற புரிதலோடு வாழ்பவர்கள் என்கிறார். உதாரணமாக நான் என் பெற்றோருக்கு நன்றி சொல்வதில்லை என்று சொல்லியுள்ளார். (ஆதாரம்: The Atlantic )

விரும்பினால், 'நன்றி' என்பதற்கு பதிலாக, 'மகிழ்ச்சி' என்றும்,  மன்னியுங்கள் என்பதற்கு பதிலாக, 'வருந்துகின்றேன்' என்றும் நெருங்கிய உறவுகளிடம் பயன்படுத்துவது சால சிறந்தது. இவை இதய உணர்வுகளை வெளிப்படுத்தும். இதைக் காரணம் காட்டி, நெருங்கியவர்கள் இல்லாத பிறரிடம் (Temporary Circle Members) நன்றி (Thanks) சொல்லாமலும் மற்றும் மன்னிப்புக் கோராமலும் (Sorry) இருந்துவிட வேண்டாம்.  உங்களை முழுமையாக புரியாத நெருக்கம் இல்லாதவர்களின் மனம் இந்த வார்த்தைகளை எதிர்பார்க்கும். ஆனால் உங்கள் அன்பர்களை இந்த வார்த்தைகள் கஷ்டப்படுத்தும். ஆகவே, இடம் காலம் நபர் பார்த்து பயன்படுத்துவது சாலச் சிறந்தது.


Acknowledgement

Meyego

Post a Comment

1 Comments

Anonymous said…
Super Information....பக்கா