தூய திருமறை சொல்லுகிறது: "சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது" (எபிரேயர் 13:1). தன் சகோதர சகோதரிகளுக்காக, உயிரைக் கூடத் துணிந்துக் கொடுக்கத்தாய் இருக்கும் சகோதரர்களைப் போற்றும் விதமாக மே 24 ஆம் நாள் உலகம் முழுவதும் உலக சகோதரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
2005 ஆம் ஆண்டு முதல், மே 24 சகோதரர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளின் தோற்றம் சரியாக தெரியாவிட்டாலும், அல்பாமாவின் சி. டேனியல் ரோட்ஸ் தான் முதலில் சகோதர தினத்தின் தொடர்புடைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்தார். ஏனெனில் சகோதரர்களுக்கு அவர்கள் தகுதியான மரியாதையை வழங்க தேசிய உடன்பிறப்பு தினத்தைத் தவிர, வேறு ஒரு சிறப்பு நாள் தேவை என்று அவர் உணர்ந்தார்.
சகோதரர்கள் தினம் என்பது (Biological Brothers) உடன் பிறந்த சகோதரர்களுக்கு மட்டுமல்ல. உங்களுக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் மற்றும் மைத்துனர்கள் ஆகியோருடனான உறவையும் கொண்டாடும் நாளாகும். சகோதரர்கள் மீது நாம் கொண்டுள்ள அன்பையும் பாசத்தையும் காட்டுவதற்கு சகோதரர்கள் தினம் நமக்கு வாய்ப்பளிக்கிறது.
நம்மைப் போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாருமில்லை என்று நெஞ்சுயர்த்திக் கூறும் அண்ணன் தம்பிகளும் உண்டு. மூத்த சகோதரர்கள் வலிமையின் தூணாக உள்ளனர். தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பார்கள். வயதில் சிறியவனாக இருந்தாலும் அவர்கள் குணத்தால் உயர்ந்தவர்கள். ஒரு ஆபத்து என்றால் ஓடோடி வருபவர்களும் அவர்களே....
அண்ணன் தங்கை உறவு, அண்ணன் தம்பி உறவு, அக்கா தம்பி உறவு என்று இத்தனை உறவுகளாய் நமக்கு அண்ணனாக தம்பியாக பக்கப்பலமாக நிற்பவரே நம் சகோதரர். அவர்களுடைய பாசத்திற்கு ஈடு இணையே கிடையாது. ஒவ்வொரு நாளும் சகோதரத்துவத்தில் வளர்ந்து பெருகுங்கள்....
"Divine Connections are tangible signs that God really cares about you" said Judson.
0 Comments