இந்திய கிறிஸ்தவ தினம் (Yeshu Bhakti Divas யேசு பக்தி திவாஸ்) ஜூலை மாதம் மூன்றாம் தேதி ஆசரிக்கப்படுகின்றது.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் இந்தியர்களால் ஆண்டுதோறும் கொண்டாடும் வகையில் இந்த நாள் ஏற்படுத்தப்பட்டது. இந்திய அப்போஸ்தலர் புனித தோமாவின் தியாக தினமாக பாரம்பரியமாக ஜூலை ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
இந்தியாவிலுள்ள அனைத்து முக்கிய திருச்சபைகளின் தலைவர்கள் மற்றும் மில்லியன் கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் ஜூலை 3 ஐ இந்திய கிறிஸ்தவ தினமாக ஒன்றிணைந்து கொண்டாடுவதே இதன் நோக்கமாகும்.
2021 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதியை இந்திய கிறிஸ்தவ தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் கொண்டாட்டங்கள், அன்பு மற்றும் கருணை செயல்கள் மற்றும் வரலாற்று துவக்கத்தை நினைவுகூரும் சிறப்பு சேவைகளுடன் ஆசரிக்கப்படுகிறது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நாள், ஏறத்தாழ 2,000 ஆண்டுகள் செழுமையான கிறிஸ்தவ வரலாற்றையும், இந்தியாவின் கலாச்சாரம், சமூகம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் கிறிஸ்தவ நம்பிக்கையின் பங்களிப்புகளையும் வலியுறுத்துகின்றது.
இந்த ஆண்டு (2022) சிறப்பாக, கி.பி 52 இல் இந்தியாவிற்கு வந்து, கி.பி 72 இல் சென்னையில் தியாகம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சீடரான புனித தாமஸ் அப்போஸ்தலரின் 1950 வது தியாக ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
மேலும் இந்த அமைப்பின் மூலம் இயேசு கிறிஸ்துவின் பூமிக்குரிய ஊழியத்தின் 2000 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஒரு பத்தாண்டு கொண்டாட்டத்தை (2021-2030) தொடங்கப்பட்டு, சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
"இந்திய கிறிஸ்தவன் என்பதில் மகிழ்வோம்
இந்தியாவை இயேசுமயமாக்க முனைவோம்."
0 Comments