Ad Code

இமயமும் குமரியும் எல்லை |ஜன கண மணஇராகம் | இந்திய கிறிஸ்தவ பாடல் | சா. ஜா. நல்லையா

இந்திய தேசிய கீதம் ஜன கண மண இராகத்தில், சா. ஜா. நல்லையா அவர்கள் எழுதிய பழைய பாடல் "இமயமும் குமரியும்..."  இந்திய தாய்த்திரு நாட்டின் சிறப்பை உணர்த்தி, இறையாசி வேண்டி இந்தப் பாடலில் வருகின்றது. பாடல் வரிகள் இதோ...

                           1
இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்.
நெஞ்சார் அன்பின் தியாக சேவையே
நெறியாம் சிலுவையின் வீரம்
தங்கிடத் தேசத்தலைவர்மேல் ஆசி
சாந்தியின் வாழ்வருள் நாதா!
சமாதானம் யேசுவின் வீடே
சகலர்க்கும் சாந்தி எம் நாடே,
சாந்தி இதற்கிலை ஈடே,
இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்.
ஜெயமே, ஜெயமே, ஜெயமே!
ஜெய, ஜெய, ஜெய, ஜெயமே!

                         2
உழவெழத் தொழிலெழ உற்ப்பத்தி மிகவே
ஓங்கிய வர்த்தகம் தாங்கப்
பொய்யா மொழி மாகாணத்தலைவர்
புருஷோத்தம மந்திரிகள்
நற்கிறிஸ் திறைவனின் சிலுவைச் சேவை
நட்புடன் கருணை இலங்கப்
பணிவிடை நேர்மை அருளே,
பரனர செனப்பகர் தெருளே,
பாரதம் போற்ற மெய்ப் பொருளே!
இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்.
ஜெயமே, ஜெயமே, ஜெயமே!
ஜெய, ஜெய, ஜெய, ஜெயமே!

Post a Comment

0 Comments