Ad Code

சென்னை தினம் | Chennai Day | ஆகஸ்ட் 22 August | Tamil Nadu Capital


சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும்

பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டி சொஸா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினமானது 2004 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

கிழக்கு இந்திய கம்பெனி வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும்.  

இந்த தாமல் வெங்கடப்பா நாயக்கர் மற்றும் பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் தான் சென்னை என்பது மரபு. மதராஸ் என்ற ஆங்கிலேயர் இட்ட பெயரும், சென்னை பட்டணம் என்று உள்ளூர்வாசிகள் இட்ட பெயரும் என இருபெயர் தாங்கி நகரம் உருவானது என்பதும் மரபு. பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் என்பது வரலாறு. 

மாநகரின் தெற்கிலும், மேற்கிலும் கூவம், ஏலாம்பூர் ஆறுகள், கிழக்கில் கடற்கரை நல்ல பாதுகாப்பு அளிக்கும் என்பதால் குடியிருப்பும் வியாபார தளமும் அமைக்க உகந்த இடம் சென்னை என்பதில் வியப்பில்லை.

வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகரம் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க நினைவுகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. எந்த ஊரை சேர்ந்தவராக இருந்தாலும் சென்னை மாநகரம் அவர்களுக்கான தேவையை நிறைவேற்ற தவறியதேயில்லை. 

சென்னைவாசி என்பதில் பெருமை கொள்ளுங்கள்...
செழிப்பும் மகிழ்வும் நிறைவாகட்டும்...

Post a Comment

0 Comments