வில்லியம் பிரன்ஹாம் (1909 - 1965) என்கிற அடிக்கடி தரிசனம் கண்ட ஊழியரை குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவரும் ஒரு காலத்தில் பிரபலமான அற்புதங்களைச் செய்யும் அமெரிக்க பிரசங்கியார். பிரச்சினை என்னவெனில் இவர் கண்ட தரிசனங்களை உபதேசமாக்கியது தான். பல பிரிவுகளாக பிரிந்து சிதறி கிடக்கும் இவரின் ரசிகர்கள் ஏராளம் ஏராளம். முடிவில் அவருக்கு நேர்ந்தது என்ன?
பிரன்ஹாம் தனது இரசிகர்களுக்கு வழங்கிய பல கதைகள் எல்லாம் கணிசமான அளவில் அலங்கரித்து பொய்யாக்கியதாகக் கண்டறியப்பட்டது. விசாரணை செய்தி நிருபர்கள், சக அமைச்சர்கள், நீதி மன்றம் மற்றும் அரசாங்க நிறுவனங்களால் அவர் குணப்படுத்தும் மறுமலர்ச்சிகள் வாயிலாக மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். குணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட பலர் விரைவில் இறந்துவிட்டனர் மற்றும் அற்புதங்கள் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் எனக் கூறுவதற்கான ஆதாரங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
பிரான்ஹாம் தனது நடைமுறைகளின் விளைவாக சட்ட சிக்கல்களை எதிர்கொண்டார். தென்னாப்பிரிக்கா மற்றும் நார்வே அரசாங்கங்கள் தங்கள் நாடுகளில் அவரது குணப்படுத்தும் பிரச்சாரங்களை நிறுத்த உத்தரவிட்டன. அமெரிக்காவில் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். தனது அமைப்பின் மூலம் பெறப்பட்ட நன்கொடை குறித்து கணக்கு காட்டத் தவறியததாக கண்டறியப்பட்டது. அவரே தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார். தண்டனை பெற்றார். மீண்டும் தவறான உபதேசங்களை போதிக்க தொடங்கினார். சில இடங்களில் வரவேற்பு இருந்தது. பெரும்பாலான சபைகள் எதிர்த்தன. முடிவில் 18.12.1965 அன்று கார் விபத்து ஏற்பட்டு, கிறிஸ்துமஸுக்கு முந்தின மரித்துப் போனார்.
தரிசனங்கள் அல்லது சொப்பனங்கள் வெளிப்பாடுகள் என்று வரும்போது நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நாம் நம்ப வேண்டியது வேதாகமத்தை மாத்திரமே. வேதத்தின் அடிப்படையில் இல்லாத, காண்கிற கேட்கிற கேள்விப்படுகிற சொப்பனங்கள், தரிசனங்கள் மற்றும் வெளிப்பாடுகள் போன்றவற்றையல்ல. ஒருவரும் கடவுளின் தீர்ப்பில் இருந்து தப்ப முடியாது. தூய வேதாகமம் மட்டுமே நம் அஸ்திபாரம்.
0 Comments