தென் தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டம் 20.10.1986 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவானது. இந்த தினம் தூத்துக்குடி தினமாக (Thoothukkudi Day) கொண்டாடப்படுகிறது
மேற்கிலும், தெற்கிலும் ஸ்ரீவைகுண்டம் வட்டமும், வடக்கில் ஒட்டப்பிடாரம் வட்டமும் உள்ளன. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது.
நீர் நிறைந்த நிலத்தைத் தூத்து, துறைமுகமும், குடியிருப்பும் தோன்றிய ஊர் என்பதால் 'தூத்துக்குடி' என்றாயிற்று. வாகைக்குளம், கங்கைக்கொண்டான் கல்வெட்டுக்களில், இவ்வூர் 'தூற்றிக்குடி' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு தயாராகும் உப்பு, ஆசியாக் கண்டத்திலேயே மிகச் சிறந்த உப்பாகும்.
தூத்துக்குடி வரலாற்று ரீதியில், இங்குள்ள மக்கள் அதிகளவில் முத்துகுளித்தும் வந்தனர். இன்றளவும் சங்கு குளிக்கும் தொழில் செய்கின்றனர். இம்மாவட்டத்திற்கு 'முத்து நகர்' என்ற பெயரும் உண்டு.
இது ஒரு துறைமுக நகரமாகும். மன்னார் வளைகுடா அருகே அமைந்துள்ள தூத்துக்குடி துறைமுகம், ஒரு 'இயற்கைத் துறைமுகம்'. இப்பகுதி, புயல் கிளம்ப முடியாத பூகோள அமைப்பைக் கொண்டுள்ளது.
தூத்துக்குடி நகரமானது சாலை, இரயில் மற்றும் விமானப் போக்குவரத்து மூலம் மற்ற முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில், அனல் மின் நிலையமும், ஸ்பிக் உரத்தொழிற்சாலையும் அமைந்துள்ளன.
இது தமிழகத்தின் 10ஆவது மாநகராட்சியாக (தூத்துக்குடி மாநகராட்சி), ஆகஸ்ட் 5, 2008இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
0 Comments