Ad Code

கிறிஸ்து பிறப்பு பண்டிகை வழிபாட்டு முறைமை • Christmas Order of Worship | கிறிஸ்துமஸ் ஆராதனை


முகவுரை பாடல் / 

முகவுரை வசனம்
(யோவான் 1:1,2 &14) ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை கடவுளிடத்திலிருந்தது, அந்த வார்த்தை கடவுளாயிருந்தது. அவர் ஆதியிலே கடவுளோடிருந்தார். அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார். (லூக்கா 2:14) உன்னதத்திலிருக்கிற கடவுளுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக.
ஆரம்ப ஜெபம்

ஆரம்ப பாடல்

பிழை உணர அழைப்பு
(கலாத்தியர் 4:5) ஆனால் காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். (யோவான் 3:17-18) உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை. (மத்தேயு 1:22) அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார். *இந்த நம்பிக்கையோடு, அன்பின் நேசரோடு ஒப்புரவாகும்படிக்கு, முழங்கால்படியிட்டு, சிறிது நேரம் அமைதியாக நம்மையே ஆராய்ந்து பார்ப்போம்.

(சிறிது நேர அமைதிக்குப் பின் பாட...)

எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா (2)

மாம்சக் கிரியை போக்கும் இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா (2)

பாவ அறிக்கை ஜெபம்
சர்வ வல்லமையும் மிகுந்த இரக்கமுள்ள பிதாவே.......... ஆமென்.

பாவ விமோசனம்
உலக மீட்பராகிய கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினால், உண்மையாய் மனந்திரும்பும் அனைவருக்கும் அருளப்படுகின்ற இறைவார்த்தைகளை கேளுங்கள்: (யோவான் 3:16) தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். (1 தீமோத்தேயு 1:15) பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமானது. (1தெசலோனிக்கர் 5:23) அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காப்பாராக! ஆமென்.

கர்த்தருடைய ஜெபம்

மறுமொழி

முறைமை சங்கீதம்

பழைய ஏற்பாட்டு வாக்கியம்

பண்டிகை கீதம் (மூன்று வாலிபர் கீதம்)

நிருப வாக்கியம்

கன்னிமரியாளின் கீதம் (லூக்கா 1. 46 - 55)

நற்செய்தி வாக்கியம்

தூயர் அதநாசியஸ் விசுவாச பிரமாணம்

மறுமொழி

கர்த்தருடைய ஜெபம்

கிறிஸ்துமஸ் சுருக்க ஜெபம்

சிறப்பு ஜெபங்கள்

சபை அறிவிப்பு

பிரசங்க ஆயத்த பாடல்

பிரசங்கம்

காணிக்கை பாடல்

காணிக்கை ஜெபம்

முடிவு ஜெபம்
(ஒப்பில்லா திரு இரா என்ற பாடலை, தீபப் பாடலாக, மெழுகுவர்த்தி ஏற்றி பாடலாம்)

ஆசீர்வாதம்
ஆண்டவருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம். எல்லாம் வல்ல தந்தையாம் கடவுளின் பேரன்பும், உலக மீட்பராகிய இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் பேரருளும், நம்முடன் இருக்கின்ற தூய ஆவியானவரின் பேரமைதியும் இன்றும் என்றும் சதாகாலங்களிலும் உங்களோடிருப்பாதாக. ஆமென்.

முடிவு கவி


மறுமொழி
கர்த்தர் உங்களோடிருப்பாராக.
அவர் உமதாவியோடும் உங்களோடிருப்பாராக.
இறை சமாதானத்தோடு சென்று வாருங்கள்
கர்த்தருடைய நாமத்தினாலே, ஆமென்.

Post a Comment

0 Comments