தலைநிமிரச் செய்பவர் நீரே
கேடகம் நீரே மகிமையும் நீரே
தலை நிமிரச் செய்பவர் நீரே
எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்
எதிர்த்தெழுவோர் எத்தனை
மிகுந்து விட்டனர்
ஆனாலும் சோர்ந்து போவதில்லை
தளர்ந்து விடுவதில்லை
தகப்பன் நீர் தாங்குகிறீர்
என்னைத் தள்ளாட விடமாட்டீர்
படுத்துறங்கி மகிழ்வுடனே
விழித்தெழுவேன்
ஏனெனில் கர்த்தர்
என்னை ஆதரிக்கின்றீர்
அச்சமில்லையே கலக்கமில்லையே
வெற்றி தரும் கர்த்தர் என்னோடு
தோல்வி என்றும் எனக்கில்லையே
ஒன்றுக்கும் நான் கலங்காமல்
ஸ்தோத்தரிப்பேன்
அறிவுக்கெட்டா பேர் அமைதி
பாதுகாக்குதே
நீர் விரும்பத்தக்கவை,தூய்மையானவை
அவைகளையே தியானம் செய்கின்றேன்
தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்
0 Comments