Ad Code

போலிப் போதனைகளை இனங்காண்பது எப்படி? How to Identify False Teachings?

மத்தேயு 7:15 - 17 களில் இயேசுவே சொன்னது: "கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள், உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள், முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும், கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்." 

கள்ளப் போதகர்களை இனங்காண்பதற்கான சில குறிப்புகள்.

🖌️ வேதம் சொல்கிறதான போதனையைப் பார்க்க முடியாது. மாறாக வெளிப்பாடு தரிசனம் என்பதையே முதன்மைபடுத்துவார்கள். 2.பேதுரு.2.1 "அவர்கள் கேட்டுக்கேதுவான வேதபரட்டுக்களை தந்திரமாய் நுழையப்பண்ணுவார்கள்."

🖌️ கேட்பவர்கள் விரும்புவதற்கு ஏற்றார்போல் பிரசங்கிப்பது. 2.தீமோ.4:3 "ஏனென்றால் அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தை பொறுத்துக்கொள்ள மனமில்லாமல் செவித்தினவள்ளவர்களாகி.தங்கள் சுய இச்சைகளுக்கேற்ப போதகர்களை சேர்துக்கொண்டு..."

🖌️ இம்மைக்கான காரியங்களில் அதிக நம்பிக்கை மற்றும் நாட்டமுடையவர்களாக இருப்பார்கள்.

🖌️ பண ஆசையுடையவர்களாய் இருப்பார்கள்.
2 பேதுரு 2.3 "பொருளாசையுடையவர்களாய் தந்திரமான வார்த்தைகளால் உங்களை தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்தி கொள்வார்கள்."

🖌️ துன்பத்திலும் இயேசுவில் உறுதியான நம்பிக்கை கொள்வதைக் காட்டிலும், செழிப்பை மட்டுமே மையப்படுத்தி போதிப்பார்கள்.

🖌️ ஊழியதிட்டங்கள் அனைத்தும் பணத்தை மையப்படுத்தியிருக்கும். தசமபாகம் தனக்குரியது என்று தரச்சொல்லி போதிப்பார்கள். அதைக் கொடுத்தால் தான் கடவுள் கொடுப்பார் என்று சொல்லி இங்கு மட்டும் கட்டளை உபதேசத்தை கொண்டு வருவார்கள்.

🖌️ பரிசுத்தத்தைவிட, கிருபையில் எப்படியும் வாழலாம் என்று புரட்டுவார்கள். யூதா 1. 4 "தேவனுடைய கிருபையை காமவிகாரத்திற்கேதுவாக புரட்டுவார்கள்."

🖌️ கிருபையினால் விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்பட்டவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை போதிக்க மாட்டார்கள். யாக்கோபு 2.26 "கிரியைகளிலில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது."

Acknowledgement
Meyego 

Post a Comment

0 Comments