இயேசு அபிஷேகம் பண்ணபடுதல்
யூதாஸ் வெளியேறுதல்
Spy Wednesday ஏன்?
மத்தேயு 26. 14 - 16
லூக்கா 14.10 - 11 இந்த வசனங்களின் படி, இயேசுவின் அபிஷேகத்திற்கு பின்பு புதன் கிழமை அன்றே யூதாஸ் இயேசுவை காட்டிக் கொடுக்க வகை தேடி சென்றான். ஆகவே தான் spy Wednesday என்று அழைக்கப்படுகிறது.
*யூதாஸ் கற்பிக்கும் பாடங்கள்*
யூதாஸ் அர்த்தம் கர்த்தரின் துதி.
காரியோத்து என்ற ஊரை சேர்ந்தவர்.
இயேசுவின் சீடர்கள் பன்னிருவரில் யூதாஸ் மட்டுமே யூதேயாவைச் சேர்ந்தவர்.
நன்கு கற்றவர், ரோம பேரரசை எதிர்ப்பவர்.
1. பண ஆசையுள்ள யூதாஸ்
யோவான் 12.3, 6
மாற்கு 14.11
பண ஆசை ஒருவனை அழிவுக்கு இட்டுச் செல்லும். யூதாஸ் முப்பது வெள்ளிக்காசுக்கு ஆசைப்பட்டான். அழியாத விண்ணக வாழ்வை இழந்தான்.
பணி செய்பவர்களின் கூட்டத்தில் இருப்பதால் மீட்பு வராது. சீடர்களிலேயே நிர்வாகத் திறமையுடைய யூதாஸ் பொருளாளராய் இருந்தார். அது அவரைக் காப்பாற்றவில்லை.
2. இருமுகமுள்ள யூதாஸ்
மத்தேயு 26.25
லூக்கா 22.48
யூதாஸ் சீடர்களிடையே நல்லமதிப்பு பெற்றிருந்தான். சீடர்கள் யாரும் அவனை சந்தேகப்படாத அளவுக்கு அவர்களிடம் நற்சான்றிதழ் பெற்றிருந்தான். விண்ணக வாழ்வை இழந்தான்.
3.மனந்திரும்பாத யூதாஸ்
மத்தேயு 27.3
அப்போ 1.18
மனஸ்தாபப்பட்ட யூதாஸ் மனந்திரும்பாமல் மடிந்து போனான். பேதுரு மறுதலித்தும், மனஸ்தாபப்பட்டு, மனங் கசந்து அழுது மனம் திரும்பினார். இயேசுவின் போதனைகளைக் கேட்பதோ, அற்புதங்களைப் பார்ப்பதோ ஒரு மனிதனை நல்லவனாய் மாற்றாது. நம்பிக்கை வேண்டும்.
எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தினால் மீட்பு வராது. ‘உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான்’ என்றும் ‘அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு’ என்றும் இயேசு எச்சரித்திருந்தார். யூதாசு செவிசாய்க்கவில்லை.?
0 Comments