நறுமணத் தென்றலாய் வீசுது
செந்தமிழ் ஓசையின் நறுந்தேன் கவி
செவிக் கினிமையாய் தொனிக்குது
தீந்தமிழ் இனிமையின் உணர் வலைகள்
தீக்கதிராய் சொற்களை உணர்வாக்குது
தெந்தமிழ் வட்டார ஏல,வாடா தம்பியென
தெறிக்கும் நேசசத்தங்கள் கேட்குது
பரணித்ததமிழ் மாப்பிள அண்ண னென்று
பங்காளி சேக்காளியை இணைக்குது
தனித்தமிழ் தரணியெங்கும் புகழ் பறக்க
தலைமுறைக்கும் பாசக்கயிறு விடுது
கொடுந்தமிழ் தன்னழகு அறு சுவையால்
கொக்கிப் போட்டேன்னை இழுக்குது
எந்தமிழ் சொந்தத்தின் கடலின் அன்பு
எந்தனை அலையலையாய் அழைக்குது
பழந்தமிழ் எனினும் காலம்போற் வளர்ந்து
பரமனின் குருசன்பை பறைசாற்றுது
பைந்தமிழ் புலவனாய் மேயேகோ யான்
பைதிரத்திற்கு வருகின்றேன் தாய்த்தமிழே!
எழுதியவர்
மேயேகோ
10.12.2019
0 Comments