அன்பின் செய்தி அறிவிக்க ஆயத்தம் தானா?
நம் மேசியா இயேசு பாலனாய்
வார்த்தையே மாம்சமானாரே
1. பணிய சென்ற மேய்ப்பர்கள் திரும்பி வந்தே பாலன் இயேசுவைப் பற்றி அறிவித்தனரே
கிறிஸ்துமஸைக் கொண்டாடும் மக்கள் கூட்டமே
கிறிஸ்துவைக் காட்டிடும் வாழ்க்கை வாழுவோம்
2. வழிகாட்டும் நட்சத்திரம் வழி காட்டவே
ஞானிகள் மூவர் வந்து பணிந்தனரே
கிறிஸ்து வண்டை பிறரை நடத்திடவே கிறிஸ்துவின் சீடராக வாழ்ந்திடுவோமே
3 மன்னாதி மன்னராம் கடவுள் இயேசு
மானிடர் நம்மிடையே மனிதரானாரே
மகிழ்வோடு பண்டிகை ஆசரிக்கும் நாம் மனிதநேயத்தோடு வாழக் கற்றுக் கொள்வோமே
எழுதியவர்: மேயேகோ
இராகம் : மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே.
0 Comments