மேயேகோ_இன் அனைத்து நண்பர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் கிறிஸ்து பிறப்பு பண்டிகை நல்வாழ்த்துகள்!!! இந்த செய்தியை யூடியூப்பில் கேட்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
இந்த 2022 ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு பெருவிழாவில் நமது சிந்தனைக்கான கருப்பொருள்: "அதிசயமான கிறிஸ்துமஸ்" லூக்கா 2.18 இல் வாசிக்கிறோம்: "அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர் (அதிசயப்பட்டார்கள்)." ஏன் அதிசயமான கிறிஸ்துமஸ்? ஏன் கிறிஸ்துமஸ் அதிசயமானது? சிந்திப்போம்...
1. அதிசயமானவரின் பிறப்பு
ஏசாயா 9.6 "ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ அதிசயமானவர்...."
🌟 செல்லப்பிள்ளை
🌟 நிதியமானவர்
2. அதிசயமாகப் பிறந்தவர்
லூக்கா 1.34 "அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார்."
⭐ இயற்கைக்கு அப்பாற்பட்ட பிறப்பு
⭐ தெய்வீக வழி நடத்துதல்
3. அதிசயங்களைச் செய்கிறவர்
லூக்கா 2.33 "குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்."
✨ வாக்கை நிறைவேற்றும் அதிசயம்
✨ இரட்சிப்பு என்னும் அதிசயம்
அதிசய பாலன் இயேசுகிறிஸ்து அதிசயப் பிறப்பாய் இப்பூவில் பிறந்தார்... அதிசயங்களைச் செய்கிறவராய் வாழ்ந்தார்... இன்னும் அதிசயமாய் நம்மை வழிநடத்துகின்ற இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் பிறப்பின் மகிழ்ச்சி இன்றும் என்றும் நம்மில் பூரணமாகட்டும்!!!
0 Comments