Ad Code

செராம்பூர் தமிழ்ச் சங்கப் பாடல் | Serampore Tamil Society Theme Song

ஆண்டவருடைய பேரருளால், செராம்பூர் தமிழ்ச் சங்கப் பாடலானது 04.12.2022 அன்று நடைபெற கிறிஸ்துப் பிறப்பு விழாவில், செராம்பூர் பல்கலைக் கழகத்தின் துணைப் பதிவாளர் அருட்திரு. முனைவர். மோ. ஜஸ்டின் மோசஸ் அவர்கள் மூலம் வெளியிடப்பட்டது. "நாம் ஒருமித்து இறை நாமத்தை மகிமைப்படுத்துவோம்" என்ற இந்தக் கருப்பாடல் செராம்பூர் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் திரு. மில்டன் மாற்கு அவர்களால் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்டதாகும். செராம்பூர் தமிழ்ச் சங்கம் குறித்து வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.

நாம் ஒருமித்து இறை
நாமத்தை மகிமைப்படுத்துவோம்
நல்லவர் அவர் வல்லவர்
நன்மைகள் அருள்பவர்

போற்றியே புகழ்வோம்
பாடியே மகிழ்வோம்
நாளும் நம்மை நடத்திடும்
நாதனைத் துதிப்போம்

1. கிறிஸ்துவின் நற்செய்தி செராம்பூர் மண்ணில்
அறிந்திட வில்லியம் கேரி ஆவல் கொண்டாரே
இறையியல் கல்லூரி ஆரம்பித்து
இறைவனின் அன்பை உணரச் செய்தார் - போற்றியே

2. செராம்பூர் தமிழ் சங்கமாக இணைந்து
செந்தமிழில் பரனைப் பாடுவோம்
இறைவேண்டல், ஒன்றிப்பில் தரித்திருந்து
இறைவார்த்தை கற்றிட அருள்புரிந்தார் - போற்றியே

3. பணிவிடை பெற அல்ல பணிவிடை புரிந்திட
பரமன் நம்மை அழைக்கின்றார்
அவர் அடிச்சுவடுகளைத் தொடர்ந்து
அவனியில் சாட்சிகளாய் வாழ்வோம் - போற்றியே

இயற்றியவர்
திரு. மில்டன் மாற்கு 

Post a Comment

0 Comments