Ad Code

செராம்பூர் தமிழ்ச் சங்கம் வரலாறு | History of Serampore Tamil Society | Serampore College, Hooghly, West Bengal

சங்கம் வைத்து மொழி வளர்த்த பெருமை நம் தமிழருக்கு உண்டு. அவ்வாறே, சங்கம் வைத்து, கிறிஸ்தவராய் வாழ்ந்த பெருமை செராம்பூர் தமிழருக்கு உண்டு. 

செராம்பூர் தமிழ்ச் சங்கம் என்பது, வில்லியம் கேரி என்ற திருத்தொண்டரால் நிறுவப்பட்ட செராம்பூர் கல்லூரியில் இறையியல் பயிலும், தமிழ் மாணாக்கர்களுக்கான சங்கமாகும். இந்தியாவிலுள்ள மேற்கு வங்காளத்தில், ஹூக்லி மாவட்டத்திலுள்ள செராம்பூர் என்ற ஊரில் இந்த கல்லூரி அமைந்துள்ளது. செராம்பூர் கல்லூரி எவ்வளவு பழமையும் தொன்மையும் வாய்ந்ததோ அவ்விதமே தமிழ்ச் சங்கமும் வரலாறு கண்டது என்றால் மிகையாகாது. 

செராம்பூர் தமிழ்ச் சங்கமானது, செராம்பூர் தமிழ் ஜெப ஐக்கியம், செராம்பூர் தமிழ் மாணவர் ஐக்கியம், செராம்பூர் தமிழ் மாணவர் சங்கம், செராம்பூர் தமிழ் ஐக்கிய சங்கம் என பல்வேறு பெயர்களில் அந்தந்த காலங்களில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. பொதுவாக செராம்பூர் தமிழ் சங்கம் என்று சொல்வது வழக்கம். 

செராம்பூர் தமிழ்ச் சங்கத்தின் நோக்கம் யாதெனில், தமிழ்நாட்டை விட்டு, தொலைதூரத்தில் வந்து, இறையியல் பயிலும் மாணாக்கர்களை ஒருமைப்படுத்தி, இறைபக்தியிலும், இறையியலிலும் வளர்ப்பதேயாகும். வெவ்வேறு மாவட்டங்கள், திருமண்டலங்கள், திருச்சபைகள் என வேறுபட்டிருந்தாலும், செராம்பூர் தமிழ்ச் சங்கம் என்ற ஒரே கூட்டமைப்பில் இணைந்து இறைசாட்சியாக வாழும் நல்லுறவுகளின் சங்கமமாகும். click here to visit fb page of Serampore Tamil Society

வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 9 மணி முதல் 10 மணி வரை செராம்பூர் தமிழ்ச் சங்கத்தின் இறை வழிபாடு நடைபெறுகிறது. இந்த வழிபாடானது மாணவர்களால் நடத்தப்படும். அதன் முடிவில் அனைவருக்கும் சிறிய சிற்றுண்டி வழங்குவது வழக்கமான மரபாகும்.

ஜூன் மாதத்தில் புதிய மாணவர்கள் வரவேற்பு விழா, டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு, ஜனவரி மாதத்தில் தமிழர் திருநாள் ஆகிய பொங்கல் விழா, ஏப்ரல் மாதத்தில் இறைப்பணியாளர்கள் வழியனுப்பு விழா மற்றும் ஏனைய சிறப்பு நிகழ்வுகளும் நடைபெறும். Click here to visit Youtube channel of Serampore Tamil Society

வருடந்தோறும், தமிழ்ச் சங்கத் தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், ஒவ்வொரு வகுப்பிற்கான பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களோடு எல்லோரும் இணைந்து செராம்பூர் தமிழ்ச் சங்கத்தின் அனைத்து காரியங்களும் திட்டமிடப்பட்டு நேர்த்தியாக நடைபெறும்.

உண்மையில், செராம்பூர் தமிழ்ச் சங்கம் அனைத்து தமிழ் மாணாக்கர்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. திரியேகக்கடவுளின் நிறைவான ஆசீர்வாதம் உங்களோடிருப்பதாக. Click here to Read William Carey Life History

Post a Comment

0 Comments