Ad Code

சரீரமாகிய ஆலயத்தைக் கனப்படுத்துங்கள் • திருவசன தியானம் • 8.1.2023 | Honouring the Body, the Temple

1. ஞாயிறு குறிப்புகள்
தேதி: 09.01.2023
ஞாயிறு: பிரசன்ன திருநாளுக்கு பின்வரும் முதலாம் ஞாயிறு
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்:
பிரசங்கி 6. 1 - 12
1 பேதுரு 1 . 12 - 25
மத்தேயு 5. 21 - 30
சங்கீதம்:  1

2. திருவசனம் & தலைப்பு
    சரீரமாகிய ஆலயத்தைக் கனப்படுத்துங்கள் 
1 பேதுரு 1:14 & 15. நீங்கள் முன்னமே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படியே இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராகியிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.

3. ஆசிரியர் & அவையோர்
அப்போஸ்தலராகிய பேதுரு அடிகளாரால் இந்த நிருபம் எழுதப்பட்டது. எருசலேமில் இருந்து துரத்தப்பட்டு ஆசியாவில் சிதறிப் போயிருந்த கிறிஸ்தவர்களுக்கு (1 பேதுரு 1.1-2) எழுதப்பட்ட கடிதம். 

4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
இந்தக் கடிதம் கிபி 64 இல் எழுதப்பட்டிருக்க வாய்ப்புண்டு. நீரோ என்ற ரோமப் பேரரசின் காலத்தில் கிறிஸ்தவர்கள் கொடிய உபத்திரவத்தை சந்தித்தனர். அப்போது பேதுரு கைதியாக ரோமில் இருந்தார். அங்கிருந்து தான் இறை மக்களின் விசுவாச வாழ்வை ஊக்குவிக்கும் வகையில் அவர் இக்கடிதத்தை எழுதினார். அங்கு தான் அவர் இரத்த சாட்சியாக மரித்ததாகவும் நம்பப்படுகிறது.

5. திருவசன விளக்கவுரை 
நமக்குக் கொடுக்கப்பட்ட வசனம் பேதுரு அடிகளார் இறை மக்களுக்கு வழங்கும் ஆலோசனைகளில் ஒன்றாகும். குறிப்பாக கிறிஸ்துவை சொந்த மீட்பராக ஏற்றுக் கொண்டதற்கு முன்பும் பின்பும் உள்ள வித்தியாசமாக இருக்க வேண்டிய வாழ்வின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது. அறியாமையின் காலம் என்பது கடவுளைக் குறித்து அறியாத போது, சுயமாக வாழ்ந்த காலம் ஆகும். இச்சைகளின்படி என்பது சொந்த மாம்ச கிரியைகளில் ஈடுபடுவது ஆகும். கடவுளைக் குறித்து அறியாத போது, கடவுளின் வார்த்தைகளுக்கு கீழ்படியாமல் வாழ்ந்த நிலையைக் குறிக்கும். அதாவது முதிர்ச்சியற்ற பிள்ளைகள் போன்ற நிலைமை.

ஆனால் கடவுளின் அழைப்பிற்கு இணங்கி, கடவுளை ஏற்றுக்கொண்ட பின்பு முதிர்ச்சி அடைகிறோம். அதாவது அவர் எப்படிப்பட்டவர் என்றும், எப்படி வாழ வேண்டும் என்றும் அறிந்து கொள்ளுகிறோம். குறிப்பாக இங்கு பேதுரு பரிசுத்தம் என்னும் ஒரு முக்கியமான காரியத்தை கற்றுக் கொடுக்கிறார். பரிசுத்தம் என்பது பிரித்தெடுக்கப்பட்ட வாழ்வைக் குறிக்கிறது. நடக்கைகள் எல்லாவற்றிலும் என்பது முழுமையான பரிசுத்தத்தைக் குறிக்கிறது. 

6. இறையியல் & வாழ்வியல்
சிதறுண்ட இறை மக்கள் எங்கு இருந்தாலும், அழைத்த கடவுளைப் போல் தூய்மையாக இருக்க வேண்டும் என்று பேதுரு ஆலோசனைக் கொடுக்கிறார். சரீர பரிசுத்தம் மிகவும் முக்கியமானது. தவறான வழிகளில் சரீரத்தைக் கெடுப்பது கடவுளின் விருப்பத்திற்கு மாறானது. சரீரம் அவர் தங்கும் ஆலயம். நாம் ஒவ்வொருவரும் அவரில் அவயவங்கள் ஆவோம் என்ற சிந்தையோடு உள்ளும் புறமும் தூய்மையாக வாழ்வவோம்...

7. அருளுரை குறிப்புகள் 


Acknowledgement
Rebin Austin T
BD Student, UBS.

Post a Comment

0 Comments