Ad Code

ஒன்றுபட அழைப்பு • A Call for Unity | 15/01/2023 / CSI Tirunelveli Diocese

1. ஞாயிறு குறிப்புகள் 
ஞாயிறு: பிரசன்ன திருநாளுக்கு பின்வரும் இரண்டாம் ஞாயிறு
தேதி: 15/01/2023
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்: எசேக்கியே்ல் 37. 15 - 28
எபேசியர் 4. 1 - 6
யோவான் 15. 1 - 12
சங்கீதம்: 133

2. திருவசனம் & தலைப்பு 
ஒன்றுபட அழைப்பு
எசேக்கியேல் 37.17 அவைகளை (இரு கோல்களை) ஒரே கோலாகும்படி ஒன்றோடொன்று இசையச்செய், அவைகள் உன் கையில் ஒன்றாகும்.

3. ஆசிரியர் & அவையோர்
எசேக்கியேல் குருவாகவும் (Priest), இறைவாக்கினராகவும் (Prophet) இருந்தவர். எருசலேமின் வீழ்ச்சிக்கு முன்பும், பின்பும் இறைவாக்குரைத்தார். வீழ்ச்சிக்குப் பின்பு, பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டோருக்கும், எருசலேமில் எஞ்சியிருந்தோருக்கும் கடவுளின் வார்த்தைகளை அறிவித்தார். குறிப்பாக, எசேக்கியேல் 37 பாபிலோனில் அடிமையாக இருந்த மக்களுக்கு சொல்லப்பட்ட இறைவாக்காகும்.

4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
எசேக்கியேல் 33.1 முதல் 37.28 வரை கடவுள் தம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அடங்கிய பகுதியாகும். இந்தப் பகுதி நாடும் மக்களும் புதுப்பொலிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லப்பட்டதாகும். ஏறக்குறைய கிமு. உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனமாகும். எசேக்கியேல் 37.1 - 14 உலர்ந்த எலும்புகள் குறித்த உருவகம் ஆகும். எசே 37. 15 - 28 கோல்கள் குறித்த உருவகம் ஆகும்.

5. திருவசன விளக்கவுரை 
எசே 37. 15 - 28 பகுதி ஒரே ராஜ்யம், ஒரு ராஜா என்பதை மையக் கருத்தாகக் கொண்டுள்ளன. எசேக்கியேல் தீர்க்கதரிசி இரண்டு கோல்களை யூதாவுக்கு ஒன்று மற்றும் யோசேப்புக்கு (இஸ்ரேல்) ஒன்றுமாக உருவகப்படுத்தியுள்ளார். இது ஒன்றிணைக்கும் கடவுளின் நோக்கத்தைக் குறிக்கும் வகையில் உள்ளது. வரலாறை திரும்பி பார்க்கும் போது, தென்னாடு (யூதா) மற்றும் வட நாடு (இஸ்ரேல்) என சாலொமோனுக்கு பின் இரண்டாக பிரிந்தது. கி.பி 722 களில் பாவத்தினிமித்தம் சிறைப்பட்டுப்போனது. கி.பி 586 களில் யூதா சிறைப்பட்டு போனது. ஆனால் கடவுள் பாபிலோனில் சிறைபிடிக்கப்பட்டவர்கள் நாடுகடத்தலில் இருந்து கடைசியாக திரும்பி வருவார்கள் என்று உறுதியளித்தப்படி ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையானர்கள். இந்த எசே 37. 15 - 28 பகுதி தாவீது அரசர் காலத்தில் ஒரே அரசர் இருந்தது போல, மீண்டும் ஒரே அரசர் ஆட்சி இருக்கும் என வாக்கு கொடுக்கிறது. 

6. இறையியல் & வாழ்வியல்
கடவுள் ஒருமைப்பாட்டை விரும்புபவர். ஆகவே அதை நிலைநிறுத்த செயல்படுகின்றார். வரலாற்றில் செயல்பட்டவர் இன்றும் செயல்படுகிறார். ஒரே வம்சத்தில் (ஆபிரகாம்) வந்த மக்கள் பிரிந்து போனார்கள். அவர்கள் ஒன்றுபட அழைப்பு கொடுத்தார். திருமறை கற்பிப்பது போல் நாம் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்கிறோம்; மற்றும் ஒரே வம்சமாயிருக்கிறோம் ஆனால் இன்று நமக்குள் பல பிரிவுகளாக இருக்கிறோம். கடவுள் ஒன்றுபட அழைப்பு கொடுக்கிறார். 

7. அருளுரை குறிப்புகள்
               ஒன்றுபட அழைப்பு
   1. கடவுளின் தலைமையில் ஒன்றுபட அழைப்பு (எசே 37.25)
   2. தூய மனதுடன் ஒன்றுபட அழைப்பு (எசே 37.23)
   3. இறைவார்த்தையில் ஒன்றுபட அழைப்பு (எசே 37.24)

Acknowledgement
Golden Rathis Y
BD Final Year, Serampore.

Post a Comment

0 Comments