Ad Code

தமிழர் திருநாள் வழிபாட்டு முறைமை | Thamilar Thirunaal Order of Worship | Pongal Celebration at Church

முகவுரை
ஆரம்ப இறைவேண்டல்
ஆரம்ப பாடல்

பாவம் உணர அழைப்பு
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! தமிழர் திருநாளாம் பொங்கல் பெருவிழாவைக் கொண்டாட நாம் இங்கு கூடிவந்திருக்கிறோம். நமக்கென்று பண்பாடு, கலாச்சாரம் மற்றும் உயரிய வாழ்வுக்கான நெறிமுறைகளை தந்துள்ளார். இயற்கையை இயக்கும் கடவுள் நம்மைப் படைத்து, இயற்கையை பராமரிக்கும் பொறுப்பை நமக்குத் தந்துள்ளார். ஆனால் நாம் கடவுளின் வார்த்தைக்கு மாறாக, நம் சுயத்தில் வாழ்ந்தோம். நன்றி மறந்தோம். பாவம் செய்தோம். அன்புள்ள கடவுள் மனம்வருந்துவோரை ஏற்றுக்கொண்டு நல்வாழ்வு வாழ வழிகாட்டுபவர். ஆகவே அவரிடம் ஒப்புரவாகிட நம்மையை தாழ்த்தி மெளனமாக ஜெபிப்போம்.

பாவ அறிக்கைப் பாடல்

நன்றிக்கூற அழைப்பு 
இறை இயேசுவில் அன்புக்குரியவர்களே! பொங்கல் விழா, தமிழர் விழா! தமிழர் நன்றி மறவாதவர்! 'செய்நன்றி கொன்ற மகற்கு உய்வில்லை', என்பதை நன்கு உணர்ந்தவர்கள். அந்த நன்றியுணர்ச்சியை காட்ட எழுந்ததே இப்பொங்கல் விழா. கடவுள் தெரிந்துகொண்ட இஸ்ரவேல் மக்களுக்கு தாம் கொடுத்த நாட்டில் முதற்பலன்களை செலுத்தி நன்றி செலுத்தும் நியமத்தை ஏற்படுத்திக்கொடுத்தார். கடவுள் நமக்கு கொடுத்த தமிழ்நாடு வயல் செறிந்த ஒரு நாடு. ஆகவே இந்நிலத்தின் மக்களாகிய நாம், நிலத்தை வளப்படுத்தி தங்களுக்கு வாழ்வளித்த படைப்பின் இறைவனுக்கு, அறுவடையின் முதற்கனியை அளித்து, நன்றிப்பலி செலுத்துவது நம் கடமை. இறைவனின் படைப்பாகிய இயற்கையின் பயனைத்துய்க்கும் எல்லா மக்களுக்கும் ஒரு பெரும் விழா. ஆகவே நாம் அனைவரும் ஒன்றித்து இறைவன் நமக்கு அளித்துள்ள அருங்கொடைகள் அனைத்திற்க்கும் நன்றி கூறுவோம்.

துதி வேளை:

ஆ.ந.: என்றும் வாழும் தந்தாய்! உம் ஞானமும் பேரன்பும் விளங்க, இவ்வுலகத்தைப்படைத்து, மனுக்குலத்தை அப்படைப்பின் சிகரமாய் வைத்து, அதை ஆளவும் பராமரிக்கவும் எங்களை ஆள்பவனாக ஏற்படுத்தியதற்காக....
சபை: ஆண்டவரே, உமக்கு நன்றி கூறுகிறோம்.

ஆ.ந.: உழைக்கும் கரங்களுக்கு ஆற்றலை நிறைவாக அளித்து உமது படைப்பின் வளத்தை மக்களனைவரும் பெற்று மகிழச் செய்வதற்காக.
சபை: ஆண்டவரே, உமக்கு நன்றி கூறுகிறோம்.

ஆ.ந.: எங்களுக்கு நல்ல மழையைத் தந்து, நிலத்தை வளப்படுத்தி, நிறைவான பலனைத் தந்ததற்காக.
சபை: ஆண்டவரே, உமக்கு நன்றி கூறுகிறோம்.

ஆ.ந.: எங்கள் உழைப்பை ஆசீர்வதித்து, எங்கள் வாழ்வில் நிறைந்த மகிழ்ச்சியையும், அமைதியையும் அளித்ததற்காக,
சபை: ஆண்டவரே உமக்கு நன்றி கூறுகிறோம்.

ஆ.ந.: பொருள் வளம் தந்து அதன் வழியாக அருள் வளமும் அளித்தமைக்காக,

சபை: ஆண்டவரே உமக்கு நன்றி கூறுகிறோம்.
ஆ.ந.: அனைத்தையும் படைத்த இறைவா! படைப்புப் பொருள் யாவும் உமதே. எங்களது உழைப்பின் மூலம் உமது படைப்பு அலுவலில் பங்கு தந்து, அதன் பலனைத் துய்க்கும் பேற்றையும் தந்து, உமது அருளை என்றும் போற்றிப் புகழ வாய்ப்பளித்ததற்காக எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உமக்கு நன்றி கூறுகிறோம். ஆமென்.

முறைமை சங்கீதம் 65. 1-13
பிதாவுக்கும்.....

முதலாம் வேதபாடம்: லேவி 23:9-14

சிறப்பு நிகழ்வு

இரண்டாம் வேதபாடம்: லூக்கா 2: 22-24

விசுவாச அறிக்கை

மன்றாட்டு வேளை

எங்களைப் படைத்து பராமரிக்கும் பரம்பொருளே! இறைவா! நீர் எங்களுக்கு கொடையாக தந்த வளமிக்க இயற்கையை நாங்கள் பாதுகாத்து எங்களுக்கு பின்வரும் சந்ததியினரும் அதன் பலன்களை பெறும் வண்ணம் நாங்கள் வாழ வழிகாட்ட வேண்டுமென்று...
சபை: நாங்கள் வேண்டிக்கொள்கிறதைக் கேட்டருளும் தயவுள்ள கர்த்தாவே.

ஆ.ந.சேற்றில் பதித்து, வெயில் மழை பாராமல் எப்போதும் விளைநிலங்களில் பணிபுரியும் விவசாய நண்பர்களுக்களுக்கு தேவையான அனைத்து இயற்கையின் கொடைகளையும் கொடுத்து, அவர்கள் வாழ்வை துளிர்க்க செய்ய வேண்டுமென்று.... 
சபை: நாங்கள் வேண்டிக்கொள்கிறதைக் கேட்டருளும் தயவுள்ள கர்த்தாவே.

ஆ.ந.: விவசாய வளமிக்க எம் நாட்டை ஆளும் அதிகார வர்க்கத்தினர் தங்கள் சுயநலத்தை மறந்து ஏழை, எளிய விவசாய பெருமக்களின் வாழ்வு, வளம் பெற விவசாய தொழில் சிறக்க சட்ட திட்டங்களை இயற்றி செயல்படுத்தும் மனதிடனை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று.... 
சபை: நாங்கள் வேண்டிக்கொள்கிறதைக் கேட்டருளும் தயவுள்ள கர்த்தாவே.

ஆ.ந.: இயற்கை சீற்றம், பொய்த்த பருவமழை, விவசாய இடுபொருட்களின் விலையேற்றம், உலகமயமான சந்தை பொருளாதாரம் போன்ற தீய சக்திகளின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் விவசாயிகள் உமது அருள் துணையோடு, நியாயமான தொழில் முறைகளை பின்பற்றி உழைக்கவும், அவர்கள் வாழ்வு ஏற்றம் காணவும், உம்முடைய திவ்விய அருளை தினமும் தந்தருள வேண்டுமென்று...
சபை: நாங்கள் வேண்டிக்கொள்கிறதைக் கேட்டருளும் தயவுள்ள கர்த்தாவே.

அகில உலமெங்கும் வாழுகின்ற அனைத்து தமிழர்கள் எல்லா வளமும் நலமும் பெற்று மகிழ்வுடனும், மற்றவர்களுக்கு முன்னோடியாகவும் வாழ அருள் புரிந்தருள வேண்டுமென்று...
சபை: நாங்கள் வேண்டிக்கொள்கிறதைக் கேட்டருளும் தயவுள்ள கர்த்தாவே.

பரமண்டல ஜெபம்:

சிறப்பு நிகழ்வு: 
அருளுரை
காணிக்கை பாடல்
நிறைவு ஜெபம்
ஆசீர்வாதம்

(ஆராதனைக்குப் பின்பு சர்க்கரைப் பொங்கல் வைத்து எல்லாருக்கும் கொடுக்கலாம்)

Acknowledgement
Meyego 

Post a Comment

0 Comments