Ad Code

மெய்யான பக்தி • True Piety | 28/01/2023 / CSI Tirunelveli Diocese

1. ஞாயிறு குறிப்புகள் 
ஞாயிறு: பிரசன்ன திருநாளுக்கு பின்வரும் நான்காம் ஞாயிறு
தேதி: 29/01/2023
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்: 
சங்கீதம்: 

2. திருவசனம் & தலைப்பு 
மெய்யான பக்தி - மீகா 6:8
மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார். நியாயம் செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.

3. ஆசிரியர் & அவையோர்
மீகா புத்தகத்தின் எழுத்தாளர் மீகா தீர்க்கதரிசியாகும் (மீகா 1:1). மீகா (Micah), "கடவுளைப் போன்றவர் யார்?",என்ற அர்த்தமுடைய பெயரை உடைய இவர் ஏறக்குறைய கி.மு 737–696 காலப்பகுதியில் யூதவில் இறைவாக்குரைத்தவரும், ஏசாயா, ஆமோஸ், ஒசேயா ஆகிய இறைவாக்கினர்களின் சமகாலத்தவரும் ஆவார். தென்மேற்கு யூதாவிலுள்ள மெரேசேத் எனும் இடத்தில் இவர் பிறந்தவர்.

4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
மீகாவின் புத்தகம் கி.மு. 735 முதல் கி.மு. 700 வரையிலான காலக்கட்டத்தின் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாக நம்பபடுகிறது. சமூக தீமைகள், ஊழல் நிறைந்த தலைமை மற்றும் உருவ வழிபாடு பெருகிய காலக்கட்டத்தில் யூதா நாட்டு மீது நியாயத்தீர்ப்பை அறிவித்தார். வடநாடு இஸ்ரயேல் மக்கள் போல் தென்னாட்டினரான யூதா மக்களும் நேர்மையற்ற தவறான வாழ்வு வாழ்ந்து வந்தனர். எனவே இஸ்ரயேல் மக்களுக்கு ஆமோஸ் இறைவாக்கினர் முன்னறிவித்த தண்டனைத் தீர்ப்பு போல், தம் யூதா நாட்டினர் மேலும் அறிவித்தார். சமாரியா மற்றும் எருசலேமின் அழிவில் உச்சம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே நேரத்தில் மனந்திரும்பும் போது, மீட்புப் பற்றியும் முன்னறிவித்தார். மீகா 6:1 - 7:20 பகுதியில் எச்சரிக்கையும் வருங்கால நம்பிக்கையும் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

5. திருவசன விளக்கவுரை
மீகா 6.1 - 7 வரை எவற்றை கடவுள் விரும்பவில்லை; எது மெய்யான பக்தி இல்லை என்றும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. மீகா 6.18 கடவுள் விரும்பும் மெய்யான பக்திக்கான வரையறை ஆகும். மோசே 613 சட்டங்களைப் பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த 613 சட்டங்களை, தாவீது தன்னுடைய சங்கீதம் 15ல், 11 ஆகவும். இறைவாக்கினர் எசாயா(33: 15), இதனை மிகச்சுருக்கமாக ஆறாகவும் சொல்லுகிறார்கள். அதே போல் மீகா இறைவாக்கினர்(6:8) அதனை மூன்றாக சொல்லுகிறார்: நியாயம், இரக்கம் மற்றும் தாழ்மை. நியாயம் செய்வது என்பது நேர்மையான முறையில் நம் பணிகளை செய்வது. இரக்கம் என்பது கருணை மற்றும் அன்புள்ள இருதயத்தோடு வாழ்வது. தாழ்மை என்பது கடவுளின்றி நாமில்லை என்ற உணர்வோடு வாழ்வதும் ஆகும்.

கடவுள் என்ன எதிர்பார்க்கிறார் என்பதையும், கடவுளின் நியாயத்தீர்ப்புக்கும் அதனுடன் தொடர்புடைய புலம்பலுக்கும் புதிய மறுசீரமைக்கப்பட்ட மற்றும் சமரசம் செய்யப்பட்ட ராஜ்யத்திற்கும் இடையில் மனிதகுலம் என்ன வழங்க வேண்டும்? என்பதையும் மீகா எடுத்துரைக்கிறார். கடவுளே உங்களுடன் சரியாக இருக்க, நான் காணிக்கை கொண்டு வர வேண்டுமா? தியாகங்கள்? என் முதல் பிறப்பு? (மீகா 6:7) என கேள்விகள் எழுப்பி பின் கடவுள் பதிலளிக்கும் வண்ணம் எழுதியுள்ளார்: “இல்லை, உங்கள் பரிசுகள், உங்கள் வார்த்தைகள் அல்லது உங்கள் விலைமதிப்பற்ற உடைமை கூட அல்ல. நீங்கள் நியாயம் செய்ய வேண்டும், இரக்கத்தை நேசிக்க வேண்டும், என்னுடன் பணிவாக நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்பதே.

6. இறையியல் & வாழ்வியல்
யூத நாட்டு அதிகாரிகள் மற்றும் மக்கள் நேர்மையற்று நடந்தனர்; அநீதிக்குத் தலை வணங்கினர்; தீச்செயல்கள் பல புரிந்தனர்; ஏழைகளை ஏமாற்றினர்; அனாதைகளை நசுக்கினர். ஜனங்களை சுரண்டி தவறாக வழிநடத்தும் யூதாவின் ஆட்சியாளர்கள், ஆசாரியர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளை மீகா தீர்க்கதரிசி கடுமையாகக் கண்டிக்கிறார். இவ்விதமாக கடவுள் எச்சரிக்கைகளை அளிக்கிறார். இன்றைக்கும் இலட்சம், ஊழல், கொள்ளை, அநீதி, போன்றவை நம் சபைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் பெருகி விட்டது. கிறிஸ்தவ பக்தி என்பது ஆலயம் செல்வது, காணிக்கை கொடுப்பது மாத்திரம் அல்ல என்பதை தெளிவாக உணர்ந்து கடவுள் நம்மிடத்தில் எதிர்ப்பார்க்கும், நேர்மை, அன்பு, பணிவு போன்றவற்றோடு வாழ்வோம்.

7. அருளுரை குறிப்புகள்
         மெய்யான பக்தி
  1. நியாயம் செய்வது... (Justice)
  2. இரக்கம் காண்பிப்பது... (Mercy)
  3. தாழ்மையாக வாழ்வது.... (Humility)

Acknowledgement
Mr. Y. Golden Rathis 

Post a Comment

0 Comments