1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: லெந்தென்னும் நாட்களுக்கு முன்வரும் ஞாயிறு
தேதி: 19/02/2023
வண்ணம்: கருநீலம் (Purple)
திருமறைப் பாடங்கள்:
சங்கீதம்:
2. திருவசனம் & தலைப்பு
லெந்து: மாற்றுருவாக்கத்தின் காலம்
( ரோமர் 11:21) சுபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு.
3. ஆசிரியர் & அவையோர்
ரோமர் புத்தகம் அபோஸ்தலனகிய பரிசுத்த பவுல் (ரோம. 1:1) என்பவரால் தேர்தெயு (ரோம.16:22) என்பவரால் இயற்றப்பட்டது. ரோமில் உள்ள கிறித்தவர்களுக்கும் எங்கும் உள்ள விசுவாசிகளுக்கும் இந்த நிருபம் எழுதப்பட்டது.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
சுமார் கி. பி. 57- ல் கொரிந்திலிருந்து பவுல் எருசலேமுக்கு போக ஆயத்தமாகும் போது இந்த புத்தகம் எழுதப்பட்டது.
5. திருவசன விளக்கவுரை
பவுல் இந்த நிருபத்தை எழுதும்போது போது ரோமில் "மா பெருங்கூட்டம்" கிறிஸ்துவை எற்றுகொண்டிருந்தது. அதில் பெரும்பாலோனோர் பிற இனத்திலிருந்து வந்தவர்கள் (1:3;11:13; 15:15,16). யூத கிறிஸ்தவர்கள் மிக குறைவாக இருந்தனர் (2:17-3:8, 3:21-4:1). ரோமில் உள்ள பிற இனத்தவர்கள் தங்களை மேன்மையாக நினைத்து யூதர்களை அற்பமாக எண்ணினர். ஆனால் பவுல் உண்மை நிலையை இங்கு விளக்குகிறார். ஏனென்றால் கிறிஸ்துவை விசுவாசியாமல் போனதினலே அந்த இடம் பிற இனத்தவறர்களுக்கு கொடுக்கப்பட்டது. ஒலிவ மரம் (யூதர்கள்) காட்டு ஒலிவ மரம் (பிற இனத்தவர்கள்). ஒலிவ மரத்தின் கிளை முறிக்கப்பட்டதினாலே அதில் காட்டு ஒழிவ மரம் ஒட்டவைக்கபட்டது. ஒலிவ மரத்தின் வேர் தான் காட்டு ஒலிவ மரத்தின் கிளைகளை தாங்கிக்கொண்டிருகிறது என்பதை பவுல் இங்கு பிற இனத்தவர்களுக்கு நினைவு படுத்துகிறார். குறிப்பாக வசனம் 11-ல் பவுல் எச்சரிக்கிறார்.
ஏனென்றால் கடவுள் இயற்கையாய் வளர்ந்த ஒலிவ கிளையையே வெட்டி எறிய தயங்கவில்லை என்றால் ஒட்டப்பட்ட காட்டு ஒலிவ மர கிளைகள் எம்மாத்திரம் என்பதை பிற இனத்தவர்கள் அறிந்து தங்களுடைய பெருமையை விட்டு கிறிஸ்துவுக்குள் தங்களை மாற்றுருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். இல்லையென்றால் சுபாவக் கிளையை (இயற்கையாய் வளர்ந்த கிளை) எப்படி கடவுள் புறக் கணித்தாரோ அதே போல், ஒட்டப்பட்ட கிளையையும் கடவுள் புறக்கணிப்பார் என்று பவுல் பிற இனத்தவர்களை எச்சரிக்கிறார்.
6. இறையியல் & வாழ்வியல்
கடவுளின் தயவால் அவர் நம்மைத் தெரிந்து கொண்டதால் இன்று நாம் கிறிஸ்துவின் சீடர்கள். அவரின்றி நாமில்லை. ஆனால் பல நேரங்களில், நம் சுயத்தால், பெலத்தால், அறிவால் சாதித்துக் கொண்டிருக்கிறோம்; தூய்மையாக வாழ்கிறோம்; கிறிஸ்தவத்திற்கு பெருமை சேர்க்கிறோம் என்று எண்ணி விடுகிறோம். இது சரியல்ல. நாம் எந்த சூழலில் கிறிஸ்துவின் அன்பை பெற்றோம்; எப்படி கிறிஸ்துவின் சீடராக மாறினோம் என்று சிந்தித்து பார்த்து, எச்சரிக்கை அடைந்து நம்மை சீர்படுத்திக்கொள்ள இந்த வசனம் அழைப்புக் கொடுக்கிறது.
7. அருளுரை குறிப்புகள்
லெந்து: மாற்றுருவாக்கத்தின் காலம்
1. விசுவாச வாழ்வில் நிலைத்தல் (11:20)
2. மேட்டிமையின்று மாறுதல் (11:20)
3. இறை தயவில் நிலைத்தல் (11:21)
Acknowledgement
Rebin Austin
0 Comments