அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. டோரிஸ் கியர்ன்ஸ் குட்வின் ஆபிரகாம் லிங்கனைப் பற்றி ஒரு புத்தகம் எழுத முடிவு செய்தபோது, அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதியைப் பற்றி ஏற்கனவே சுமார் பதினான்காயிரம் புத்தகங்கள் எழுதப்பட்டிருப்பது அவரை மிரட்டியது. இந்த அன்புத் தலைவரைப் பற்றி என்ன சொல்ல முடியும்? அமெரிகாவின் 16ஆவது ஜனாதிபதியாக இருந்தவர் இவர். அந்நாட்களில் ஒரு நாள் அதிகாலையில் மூத்த அரசு அலுவலர்கள் அவரை பார்த்து ஒரு முக்கியமான காரியத்தில் அவருடைய ஆலோசனையை பெறும்படி சென்றிருந்தார்கள். அவரது அறையின் அருகில் சென்ற போது அவர் யாருடனோ பேசி கொண்டிருந்தது போல் பேச்சு குரல் கேட்டது, ஆகவே இவரை தொந்தரவு செய்ய மனமில்லாமல் அவர் வரும் வரை பக்கத்து அறையில் காத்திருந்தனர்.
வெகு நேரம் கழித்து ஆபிரகாம் லிங்கன் வெளியே வந்தார். 'ஐயா நாங்கள் காலை 5 மணிக்கே வந்து விட்டோம். நீங்கள் யாருடனோ பேசி கொணடிருந்தீர்கள். ஆகவே காத்திருந்தோம்' என்றனர். 'வேறு யாருமல்ல, நான் ஆண்டவரோடு பேசி கொண்டிருந்தேன்' என்று ஆபிரகாம் சொன்னவுடன் அவாகளுக்கொல்லாம் பெரிய ஆச்சரியம்! அவர்களது வியப்பை கண்ட ஆபிரகாம் சிறிது விளக்கம் அளித்தார். 'நான் சிறு பையனாக இருககும் போது காடுகளில் விறகு வெட்டி ஜீவனம் செய்து வந்தேன். என் பாட்டி தான் என்னை பராமரித்து வந்தார்கள். அவர்கள் எனக்கொரு வேதத்தை கொடுத்து ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் எழுந்தவுடன் அதை தியானிக்க வேண்டும் என்றும், ஆண்டவருடன் மாத்திரமே முதலில் பேச வேண்டும் என்றும் கூறினார்கள். அந்த பாடத்தை இன்னும் விட்டு விடாமல், முதலில் ஆண்டவருடன் நான் பேசுகிறேன்' என்றார்....
உலக மனிதர்கள் யாருடனும் பேசும் முன்பே உலகை படைத்த கடவுளுடன் பேசுவது எத்தனை பாக்கியம்! அந்த நாளை அவருடைய பொற் பாதத்தில் சமர்ப்பித்து, அந்த நாளுக்குரிய கிருபைகளை பெற்று கொண்டு ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்க கடவுள் தாமே நம் ஒவ்வொருக்கும் கிருபை தருவாராக!
0 Comments