Ad Code

அசுத்த ஆவியுள்ள மனிதனுக்கு விடுதலை | Jesus Drives out an Evil • மாற்கு 1:21-27 லூக்கா 4:31-36

1. தலைப்பு
அசுத்த ஆவியுள்ள மனிதனுக்கு விடுதலை: அசுத்த ஆவிகள் மீது இறைமைந்தரின் அதிகாரம் 

2. திருமறை பகுதி
மாற்கு 1:21-27 
லூக்கா 4:31-36

3. இடம் & பின்னணி
மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தி நூல்களில் மட்டுமே இந்த அற்புதம் இடம் பெற்றுள்ளது. மாற்கு நற்செய்தி நூலில் வரும் முதல் அற்புதம் இதுவாகும். ஆனால், இதற்கு முன்பும் இயேசு அற்புதங்கள் செய்ததாக யோவான் நற்செய்தியில் உள்ளது. அதைக் குறித்து நாம் தியானித்தோம். அப்படி பார்க்கும் போது, இந்த மூன்றாவது அற்புதமும் கலிலேயாவில் தான் நடைபெற்றுள்ளது. இதை இயேசு கிறிஸ்து கப்பர்நகூமில் உள்ள ஜெப ஆலயத்தில் (Synagogue - யூதர்கள் வழிபடும் இடம்) போதனை (Teaching) செய்து கொண்டிருக்கும் போது, இந்த அற்புதத்தை செய்கின்றார். 

4. விளக்கவுரை
யூதர்களின் ஜெப ஆலயத்தில் இயேசு போதித்து கொண்டிருக்கும் போது, அசுத்த ஆவியுள்ள ஒருவன் இயேசுவைப் பார்த்து, “நாசரேத்தூர் இயேசுவே, உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? எங்களை ஒழித்துக்கட்டவா வந்தீர்கள்? நீங்கள் யாரென்று எனக்கு நன்றாகத் தெரியும், நீங்கள் கடவுளால் அனுப்பப்பட்ட பரிசுத்தர்!” என்று கத்துகிறான். உடனே இயேசு அவனைப் பிடித்திருந்த அசுத்த ஆவியிடம் “பேசாதே, இவனைவிட்டு வெளியே போ!” என்று அதட்டுகிறார். அப்போது, அந்த அசுத்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்கி, அவனைக் கீழே தள்ளுகிறது; தொண்டைகிழிய கத்துகிறது. ஆனால், “அவனைக் காயப்படுத்தாமல்” அவனைவிட்டு வெளியே போகிறது. குடியிருந்த மக்கள் ஆச்சரியப்பட்டு இந்த செய்தியை பரப்பினார்கள்.

5. கருத்துரை
இந்த அற்புதத்தில் இயேசுவின் அதிகாரமுள்ள போதனையையும், அசுத்த ஆவியை விரட்டும் அவரது அதிகாரத்த்தையும் காண முடிகிறது. அவர் வேத அறிஞர்களைப் போல பேசாமல், அதிகாரத்தோடு பேசுகிறார். அதட்டுகிறார்.—மாற்குஏனென்றால், அவர் வேத அறிஞர்களைப் போல பேசாமல், அதிகாரத்தோடு பேசுகிறார். ஜெபக்கூடத்தில் இருக்கிற மக்களுக்கு ஒரே ஆச்சரியம்! “இது என்ன? . . . அதிகாரத்தோடு பேய்களுக்கும் கட்டளையிடுகிறார், அவையும் கீழ்ப்படிகின்றனவே!” என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள். கிறிஸ்தவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நாம் பயப்படாத வரை அசுத்த ஆவிகள் நம்மை ஒன்றும் செய்ய இயலாது. அவற்றை மேற்கொள்ளும் அதிகாரம் உடையவர் இயேசு என்ற நம்பிக்கையோடு வாழ்வோம்.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.


_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ் 
        (மேயேகோ)



Post a Comment

0 Comments