"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்.
இன்றைய நாளுக்கான சேகரம்:
நெடும்பாறை
(வடக்கு சபைமன்றம்)
சபைகள்: 6
தூய யோவான் ஆலயம், நெடும்பாறை
தூய பவுலின் ஆலயம், அரண்டல்
கிறிஸ்துமஸ் ஆலயம், அம்பநாடு
நல்மேய்ப்பர் ஆலயம், பிளாரன்ஸ்
சீயோன் ஆலயம், சொர்ணகிரி
ஆனைச்சாடி
சேகரத் தலைவர்:
Rev. இம்மானுவேல்
இறையியல் பயின்ற சபை ஊழியர்:
திரு. தங்கப்பிரபு
சபை ஊழியர்கள்:
திரு. ரிஜோ
குடும்பங்கள் எண்ணிக்கை:
சுமார் 75
தற்போதைய விண்ணப்பங்கள்:
நெடும்பாறை சேகரத்தின் ஆறு சபைகளும் கேரள மாநிலத்தின் எல்லைக்குள் அமைந்ததுள்ளன. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் ரப்பர் மற்றும் டீ எஸ்டேட் தொழிலுக்காக தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்கள். அவர்கள் நல்வாழ்விற்காக ஜெபிப்போம்.
சேனைகிரி பகுதியில் தூய திரித்துவ பேராலயத்தின் சார்பாக, புதிய ஆலய கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றது. அதற்காக ஜெபிப்போம்.
சிறப்பு தியானக் கூடுகைகள் நடத்த இங்கு வசதிகள் உள்ளன. இன்னும் இவை மேம்படுத்தப்பட ஜெபிப்போம்.
மேலும் சேகர வளர்ச்சிக்காகவும் இறைமக்களின் நன்மைக்காகவும் ஜெபிப்போம்.
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.
- www.meyego.in
0 Comments