Ad Code

ஏழு அப்பங்கள் மற்றும் சில சிறு மீன்கள்: திருப்திபடுத்தும் இறைமைந்தர் • Miracles of Jesus Christ

1. தலைப்பு
ஏழு அப்பங்கள் மற்றும் சிறு மீன்கள்: திருப்திபடுத்தும் இறைமைந்தர்

2. திருமறை பகுதி
மத்தேயு 15:32 - 39
மாற்கு 8: 1 - 13

3. இடம் & பின்னணி
தெக்கபோலி பட்டணத்தில் 7 அப்பத்தையும், சில சிறு மீன்களையும் ஆசீர்வதித்து உணவளித்தார் 4000 ஆண்கள் உட்பட பலர் மூன்று நாட்கள் இயேசுவோடு ஜனங்கள் தங்கியிருந்த சூழலில் இந்த அற்புதம் நடைபெற்றது. ஆனால் 5 அப்பம் 2 மீன் அற்புதத்தில் 5000 ஆண்கள் உட்பட பலர் இயேசுவோடு ஜனங்கள் ஒரு நாள் மட்டும் தங்கியிருந்தனர்.

4. விளக்கவுரை
இயேசு தம்முடைய உபதேசத்தை மூன்று நாட்களாக கேட்ட மக்களை பட்டினியாக வீட்டுக்கு அனுப்பி விட, விரும்பாமல், அவருடைய சீஷர்களிடத்தில் பேசிய போது, “ஒதுக்குப்புறமான இந்த இடத்தில் இந்த மக்களுக்குத் தேவையான உணவை எங்கிருந்து வாங்க முடியும்?” என்று அவரிடம் கேட்டார்கள். அப்போது அவர், “உங்களிடம் எத்தனை ரொட்டிகள் இருக்கின்றன?” என்று கேட்க அதற்கு அவர்கள், “ஏழு” என்று சொன்னார்கள். அப்போது, தரையில் உட்காரும்படி கூட்டத்தாரிடம் அவர் சொல்லி அந்த ஏழு அப்பங்களையும் சில சிறு மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லி, அவற்றைப் பிட்டு, பரிமாறுவதற்காகச் சீஷர்களிடம் கொடுத்தார், சீடர்கள் பரிமாறின பின்பு, எல்லாரும் திருப்தியாகச் சாப்பிட்டார்கள்; அதன் பின்பு, மீதியானவற்றை 7 கூடைகளில் எடுத்தார்கள்.

5. கருத்துரை
இயேசு ஜனங்களை பார்த்து மனதுருகுகிறவரென்றும், ஒன்றுமில்லாத இடத்திலும் யாவற்றையும் உருவாக்கிக் கொடுக்க வல்லவரென்பதையும், இந்த அற்புதத்திலிருந்து அறிகிறோம். இயேசுவிடம் கொடுத்த 7 அப்பங்களையும், சில சிறு மீன்களையும் கொண்டு 4000 பேரை போஷித்தார். 5000 ஆண்கள் உட்பட பலரைப் போஷித்ததைப் போலத்தான் இதுவும். ஆனால் எதற்காக திரும்பவும் செய்கிறாரென்றால், இயேசுவின் சீடர்களின் விசுவாசத்தை பெலப்படுத்தவும், இயேசு எதையும் செய்ய வல்லவர் என்பதை உறுதியாக அவர்கள் தெரிந்து கொள்வதற்காகவும் இவ்வாறு செய்தார். இயேசு கிறிஸ்து அவர்கள் சரீர ரீதியாக மற்றும் விசுவாச ரீதியாக சீடர்களையும் மக்களையும் திருப்திபடுத்தினார். 
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.

_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ் 
        (மேயேகோ)

Post a Comment

0 Comments