Ad Code

காதை ஒட்டுதல்: பகைவருக்கும் அற்புதம் செய்யும் இறைமைந்தர் • Miracles of God's Son

1. தலைப்பு
காதை ஒட்டுதல்: பகைவருக்கும் அற்புதம் செய்யும் இறைமைந்தர்

2. திருமறை பகுதி
லூக்கா 22: 50 - 51
யோவான் 18: 10 - 11

3. இடம் & பின்னணி
லூக்கா மற்றும் யோவான் நற்செய்தியாளர்கள் மட்டுமே இந்த அற்புதத்தை பதிவு செய்துள்ளார். புனித வியாழன் அன்று, கடைசி இராப்போஜனம் முடிந்த பின்பு இயேசு கெத்சமனே தோட்டத்திற்கு சென்றார். அங்கு ஜெபம் செய்து பின்பு, இயேசு கைது செய்யப்படும் போது இந்த அற்புதம் நடைபெற்றதாக உள்ளது. 

4. விளக்கவுரை
இயேசுவை கைது செய்யும் நேரத்தில், இயேசுவின் சீஷர்கள் இயேசுவிடம், “ஐயா, எங்கள் வாள்களை பயன்படுத்தட்டுமா?” என்று கேட்டுக் கொண்டிருக்கையில் சீஷர்களில் ஒருவர் வாளைப் பயன்படுத்தவும் செய்தார். இவர் முதற் சீடர் பேதுரு என்று நம்பப்படுகின்றது. தலைமை ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை அவர் வெட்டினார். அவர் பெயர் மல்குஸ். யோவான் 18:10 இல் பார்க்கும் போது, அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலே கொடு; பிதா எனக்கு கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார்.” லூக்கா 22 : 51 இல் பார்க்கும் போது, “அப்பொழுது இயேசு: இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார்.”

5. கருத்துரை
அடுத்தவர் உயிர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்படி கடவுள் அவரது 5ம் கற்பனையில் குறிப்பிட்டிருக்கிறார். ஆயுதங்களை அழிவுக்கு பயன்படுத்துவதும், உயிர்சேதங்களுக்கு பயன்படுத்துவதும் இயேசுகிறிஸ்துவின் அன்புக்கு எதிரானது. வன்முறைகளை கிறிஸ்து இயேசு எதிர்க்கிறார். ஆயுதங்களால் எந்தப் பிரச்சனைகளும் பகைகளும் மாறாது எனபதே உண்மை. இயேசு தான் போதித்தை தம் வாழ்விலும் கடைபிடித்தார். இந்த அற்புதத்தில் இயேசு தன்னைப் பிடிக்க வந்த நேரத்தில் கூட அற்புதம் செய்ததைப் பார்க்கிறோம். அதுவும் இயேசு அந்த அற்புதத்தை எதிரிக்குச் செய்ததைப் பார்க்கிறோம். நாமும் இயேசுவைப் போல சத்துருக்களை, எதிரிகளை நேசித்து, அவர்களுக்கு நன்மையையே செய்வோம்.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.

_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ் 
        (மேயேகோ)

Post a Comment

0 Comments