1. தலைப்பு
உயிர்த்தெழுந்த இயேசுவின் அற்புதம்: சீடர்களை நல்வழிப்படுத்திய இறைமைந்தர்
2. திருமறை பகுதி
யோவான் 21: 4 - 11
3. இடம் & பின்னணி
யோவான் நற்செய்தியாளர் மட்டுமே சீடர்கள் பெற்ற கடைசி அற்புதத்தை பதிவிட்டுள்ளார். இந்த அற்புதம் திபேரியக் கடலருகே நடைபெற்றது. கலிலேயக் கடல் (Sea of Galilee) என்றும் கெனசரேத்து ஏரி (Lake of Gennesaret) என்றும் கெனசரேத்து கடல் என்றும் அழைக்கப்படுகின்றது. கின்னர் என்னும் எபிரேயச் சொல்லுக்கு யாழ் என்று பொருள். இந்த ஏரி யாழ் வடிவில் உள்ளதால் அப்பெயர் பெற்றிருக்கலாம்.” என்றும் அழைக்கப்படுகிறது இது இதயம் போன்ற வடிவம் கொண்டது என சிலர் கூறுகின்றனர். இந்த ஏரிப் பகுதியில்தான் இயேசு கிறிஸ்துவின் இறைப்பணி பெரும்பாலும் நிகழ்ந்தது. இயேசு உயிர்த்தெழுந்த பின்பு செய்த கடைசி அற்புதமாக இது பதிவு செய்யப்பட்டு உள்ளது. இயேசு உயிரோடு எழுப்பப்பட்ட பின்பு தன்னுடைய சீஷர்கள் முன்னால் தோன்றியது இது மூன்றாவது தடவை. இது சீடர்கள் வாழ்வின் இயேசு செய்த இரண்டாவது மீன்பிடி அற்புதமாகும் (லூக்கா 5 & யோவான் 21)
4. விளக்கவுரை
இயேசு உயிர்த்தெழுந்து, அவரைக் கண்ட பிறகும் சீடர்கள் ஒரு நிலையான முடிவை எடுக்கவில்லை. சீமோன் பேதுரு தம் சக சீடர்களான, தோமா, நாத்தான்வேல் செபெதேயுவின் மகன்கள் மற்றும் இன்னும் இரண்டு பேரிடம் “நான் மீன்பிடிக்கப் போகிறேன்” என்று சொல்ல, , “நாங்களும் உங்களோடு வருகிறோம்” என்று சொல்லிவிட்டு, படகில் ஏறிப் போனார்கள். ஆனால், அன்று ராத்திரி அவர்களுக்கு ஒரு மீன்கூட கிடைக்கவில்லை. அப்போது இயேசு அவர்களிடம் சென்று அற்புதம் செய்தார். பேதுரு அதைக் கேட்டதும், கழற்றி வைத்திருந்த மேலங்கியைப் போட்டுக்கொண்டு கடலில் குதித்தார். மற்ற சீஷர்களோ சிறிய படகில் இருந்தபடி, மீன்கள் நிறைந்த வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள் அவர்கள் 150 பெரிய மீன்கள் பிடித்தனர்.
சீஷர்கள் கரையை அடைந்த போது கரிநெருப்பு போட்டிருக்கிறதையும். அதின் மேல் மீன் வைத்திருக்கிறதையும் கண்டார்கள். இந்த அக்கினி, மீன், அப்பம் எல்லாம் எங்கிருந்து வந்தது? அவர்கள் தொலைவுக்கு அப்பால் இருந்தார்கள். அவர்களுக்கு சாப்பிட ஒன்றும் இல்லாதிருந்தது. இப்போது அவர்கள் வந்த போது மீன் பொரிக்கப்பட்டிருந்தது. அவர்களை சாப்பிடும்படி துரிதப்படுத்தினார். அவர் கர்த்தர், அதே சமயத்தில் விருந்து அளிப்பவராகவும் இருக்கிறார். தயார் செய்த உணவில் பரிவுடன் அவர்களுக்குரிய பங்கை கொடுத்தார்.
5. கருத்துரை
சீடர்கள் இவ்விதமாய் வழிவிலகி அலைந்து கொண்டிருந்த இச் செயலுக்காக இயேசு அவர்களுடைய சீஷர்களை கடிந்து கொள்ளவில்லை. அவர்கள் திரும்பி வரும் வரை அவர் கடற்கரையில் காத்து நின்றார். அவர்களுடைய வலைகளில் அவரால் மீன்களை சிக்க வைத்திருக்க முடியும். ஆனால் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும்படி அவர் விரும்பினார். இப்போது, அவர் தம்முடைய சீடர்களை அப்போஸ்தலர்கள் என்று அழைக்காமல் ஆனால் பிள்ளைகளே என்று அழைத்தார். அவர் என்ன சொல்லியிருந்தார் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். மேலும் தங்கள் வாழ்வில் அதை நடைமுறைப்படுத்தவில்லை. இந்த வேதனை தரும் செயலை அவர்கள் செய்தாலும் இயேசு அவர்களை தகுந்த முறையில் நல்வழிப்படுத்தினார். கடவுள் நம் வாழ்வில் செய்யும் சில அற்புதங்கள் நம்மை நல்வழிப்படுத்தி அவர்க்கு நேராக நடத்த என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.
_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ்
(மேயேகோ)
0 Comments