1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: பெந்தெகோஸ்தே ஞாயிறு
தேதி: 28/5/2023
வண்ணம்: வெள்ளை
திருமறைப் பாடங்கள்:
சங்கீதம்:
2. திருவசனம் & தலைப்பு
தூய ஆவியானவர் Holy Spirit
எசேக்கியேல் 36:27 (பவர் மொழிபெயர்ப்பு) உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.
(திருவிலியம்) என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைப் கடைப்பிடிக்கவும் என் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன்.
3. ஆசிரியர் & அவையோர்
எசேக்கியேல் குருவாகவும் (Priest), இறைவாக்கினராகவும் (Prophet) இருந்தவர். எருசலேமின் வீழ்ச்சிக்கு முன்பும், பின்பும் இறைவாக்குரைத்தார். வீழ்ச்சிக்குப் பின்பு, பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டோருக்கும், எருசலேமில் எஞ்சியிருந்தோருக்கும் கடவுளின் வார்த்தைகளை அறிவித்தார்.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
பாபிலோன் தேசத்தில் சிறையிருப்பில் இருக்கும் இஸ்ரவேல் ஜனங்களை ஆண்டவர் மீண்டும் இஸ்ரவேல் தேசத்திற்கு கொண்டு வருவேன் என்று எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலம் தீர்க்கதரிசனமாக கூறுகிறார்.
5. திருவசன விளக்கவுரை
இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் நடக்கையினாலும், செய்கையினாலும்- விக்கிரக ஆராதனை (Social, Moral and Cultic Sins) தங்களுடைய தேசத்தை தீட்டுப்படுத்தினார்கள் (V.17,18). இதினிமித்தம் ஆண்டவர் அவர்களை சிதறப்பண்ணினார் (V.19). மோசேயின் சட்டத்தின் படி தேசத்தை தீட்டுப்படுத்தினவர்கள், தேசத்தில் இருக்க முடியாது என்பது ஆண்டவருடைய கட்டளை (எண்.35:34, உபா. 21:23). கடவுள் தன்னுடைய பரிசுத்த நாமத்தை நிலை நிறுத்த இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக செயல்பட்டார் (Divine Judgement -V.20,21).
வசனம் 26&27-இல் மீண்டும் இஸ்ரவேல் ஜனங்களை தங்களுடைய நாட்டிற்கு கொண்டு வருவதற்கு ஆண்டவர் அவ்ர்களை புதுப்பிக்க விரும்புகிறார். மோசேயின் சட்டப்படி ஜலத்தினால் சுத்திகாரிகப்பட்டு புதிதாக்கப்படவர் மட்டுமே மீண்டும் தேசத்திற்குள் பிரவேசிக்க முடியும் (எண். 19: 13,20). ஆண்டவர் தன்னுடைய ஆவியின் மூலம் அவ்ர்களை புதுப்பிப்பேன் என்று தீர்க்கதரிசி மூலம் உரைக்கிறார். கடவுளுடைய இரக்கம் மற்றும் மன்னிக்கும் குணம் இஸ்ரவேல் ஜனங்களுடைய இருதயத்தை உணர்வுள்ள இருதயமாக மாற்றுகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் ஆண்டவருடைய உடன்படிக்கை, கட்டளை மற்றும் நியாயங்களை கைக்கொள்ளுவதற்கு ஆண்டவருடைய உதவி தேவை அதை ஆண்டவர் தன்னுடைய ஆவியானவர் மூலம் செய்வேன் என்று தீர்க்கன் மூலம் வாக்குரைக்கிறார்(V.26,27).
6. இறையியல் & வாழ்வியல்
பெந்தேகோஸ்தே திருநாள் என்பது திருச்சபை வரலாற்றில் மிக முக்கியமான நாள். நடைமுறையில் திருச்சபை செயலுக்கு வந்த நாள் என்று சொன்னால் மிகையாகாது. கிறிஸ்துவின் வாக்குப் படி, தூய ஆவியானவர் பொழியப்பட்ட திருநாள்.
இன்றைக்கு சபைகளில் மிகவும் அசட்டைப்பண்ணப்படுபவர் தூய ஆவியானவர். பலவித தவறான உபதேசங்கள் பெருகிவிட்டன. சபை விசுவாசிகள் மிக கவனமாக இருக்க வேண்டும்.
எசேக்கியேல் இறைவாக்கினர் கற்பிக்கும் பாடம் என்னவென்றால்,
தூய ஆவியானவர் அனுபவ வாழ்வு என்பது புதிய இருதமுள்ள புதிய வாழ்வு (36.26). அதாவது பாவ குணங்களில் இருந்து மீட்கப்பட்ட வாழ்வு. இது தான் தூய ஆவியானவர் நம்மில் இருப்பதற்கான அடையாளம். வெறும் பக்தி பரவசம் என்பது பரிசுத்த ஆவியின் வெளிப்பாடு அல்ல.
7. அருளுரை குறிப்புகள்
தூய ஆவியானவர்
1. தூய்மைப்படுத்துபவர் (36. 25)
2. புதிய வாழ்வு தருபவர் (36.26)
3. நன்னெறியில் நடத்துபவர் (36.27)
எழுதியவர்
தா. ரெபின் ஆஸ்டின்
சபை ஊழியர்,
0 Comments