Ad Code

மே தினம் | உழைப்பாளர் தினம் | May Day • International Workers Day

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் தேதி ஆசரிக்கப்படுகிறது. உழைப்பாளர்களின் தியாகத்தை போற்றவும், அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த தினம் ஆண்டுதோறும் மே 1 அன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

1880கள் காலகட்டத்தில் உலகம் முழுவதும் 16 முதல் 18 மணிநேரங்கள் வரை தொழிலாளர்கள் கட்டாய பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நல்ல உறக்கம், நல்ல உணவு, நல்ல உறைவிடம் என்பதெல்லாம் பணக்கார வர்க்கத்திற்கு சொந்தமானதாக மட்டுமே இருந்தது. இதை எதிர்த்து தொழிற்புரட்சி ஏற்பட்ட நாடுகளில் போராட்டங்கள் வெடித்தன. அதில் முக்கியமானது மே 3,4 சிக்காகோ நகரில் தொழிலாளர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் ம் மற்றும் பொதுக்கூட்டத்தில் காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டதோடு, 7 தொழிலாளர் தலைவர்கள் தூக்கிலடப்பட்டனர்.

தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வர 1889 ஜூலை மாதம் 14ம் தேதி உலக தொழிலாளர்களின் சர்வதேச கூட்டம் பாரிசில் நடைபெற்றது. இதில் தொழிலாளர் வர்க்கத்தின் கடவுளாக பார்க்கப்படும் காரல் மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். அதில் காரல் மார்க்ஸ் தான் 8 மணி நேர வேலை, 8 மணி நேரம் உறக்கம், 8 மணி நேரம் ஓய்வு என்ற கோஷத்தை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுக்கவும், மே 1ஐ உலக தொழிலாளர் தினமாக கொண்டாடவும் அறைகூவல் விடுத்தார். அதில் இருந்து தான் காலம் செல்ல செல்ல, ஒவ்வொரு நாடுகளும் படிப்படியாக இந்த தினத்தையே தொழிலாளர் தினமாக கொண்டாடவும் துவங்கினர்.

இந்தியாவில் முதன்முதலில் மே தினம் கொண்டாடப்பட்டது சமூகநீதி மண் என்றழைக்கப்படும் நமது தமிழகத்தில்தான். பொதுவுடைமைவாதியான சிங்காரவேலர் தான் முதன்முதலில் சென்னை மெரினா கடற்கரையில் மே தின பொதுக்கூட்டத்தை நடத்தியவர். சென்னை திருவான்மியூரில் தான் இந்தியாவிலேயே முதன் முதலில் மே தின கொடி ஏற்றப்பட்டது.

அனைத்து உழைப்பாளர்களுக்கும் மேயேகோ_இன் இனிய நல்வாழ்த்துகள்!!! (நீதிமொழிகள் 22:29) தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.

Post a Comment

0 Comments