1. சமயக்குழுவற்றவர் (Non-Denomination) என்று வெளியில் பித்திக் கொண்டு, உள்ளே "குறிப்பிட்ட சபைப் பிரிவைச் சார்ந்த ஒரு பாஸ்டரின் செய்தியைக் கேட்காவிட்டால் மனமே நல்லாயில்லை" என்று இருப்பவன் அடிப்படைவாதியா?
இந்த சபைக்குழு தான் என்று நேரடியாக காண்பித்தாலும், ஒரு குறிப்பிட்ட பாஸ்டரையோ, ஒருவரின் கொள்கைகளையோ சாராமல், எல்லாரோடும் இணைந்து செல்ல நினைப்பவன் அடிப்படைவாதியா?
2. தான் சமயக் குழுவற்ற ஒரு பிரிவு என்று காண்பிக்க, பிற சமயக் குழுக்காரரை "என்னை ஒதுக்கிறார்கள்" என்று வெளியே நாடகமாடுவன் அடிப்படைவாதியா?
தான் சி.எஸ்.ஐ. என்றாலும், தன் சக நண்பர்களோடு நேரம் செலவழிப்பதை விட்டுவிட்டு சமயக் குழுவற்ற ஒரு பிரிவு என்று சொல்லுபவனோடு நேரம் செலவிட்டானே அவன் அடிப்படைவாதியா?
3. பாரம்பரிய ஆராதனை முறைமை (Liturgy) பின்பற்றியதற்காக எந்த உதவியும் செய்ய முன்வரவில்லையே அது அடிப்படைவாதியா? பெந்தேகோஸ்தே (Non-Liturgy) ஆராதனை முறைமையை பின்பற்றினாலும், ஒரு சி.எஸ்.ஐ காரன் அனைத்து உதவிகளையும் கேட்காமல் நின்று செய்தானே அது அடிப்படைவாதியா?
4. வியாதியோடு ஒரு சி.எஸ்.ஐ. காரன் இருக்கும் போது, "கடவுள் கவனிக்க சொல்லவில்லை; என் வழி வேறு" என்று சொல்லி ஒதுங்கியவன் அடிப்படைவாதியா? தன்னுடைய காரியங்களை விட்டுவிட்டு ஒரு சி.எஸ்.ஐ காரன் காலம் நேரம் மாறாமல் உடனிருந்து கவனித்தவன் அடிப்படைவாதியா?
5. தன் இருதய கொடூர குணங்களால் (பொறாமை, பெருமை) பேசாமல் அமைதியாக மாறிவிட்டு, ஏன் பேசவில்லை என்று கேட்டு, நட்பை முறித்து விடுவோம் என்றவன் அடிப்படைவாதியா? எல்லா பழி சொல்லையும் வாங்கி விட்டு, பொறுமையாகவே காத்திருந்து நட்புக்காய் போராடுபவன் அடிப்படைவாதியா?
6. தான் ஆவிக்குரியவன் என்று காண்பிக்க பிற சமயக் குழுவினரை ஆவியில்லாதவர்கள் என்று சொன்னவன் ஆவிக்குரிய அடிப்படைவாதியா? ஆலோசனை கேட்கும் போதெல்லாம் நல்ல ஆலோசனை கொடுத்து உதவியவன் ஆவி இல்லாத அடிப்படைவாதியா?
7. நேரம் செலவிட வரும் போதெல்லாம், "என் ஊழியம் முக்கியம்; என் விசுவாசிகள் (my believers)" என்று பேச மறுத்து அனுப்பி விட்டவன் அடிப்படைவாதியா?
ஒரேயொரு நாள் தன் நண்பர்களுடன் சி.எஸ்.ஐ தினம் கொண்டாடிய போது, அழைத்தும் வராமல், எதிர்த்து விட்டு, ஒதிக்கினோம் என்று பழி போட்ட போதும், மீண்டும் தேடி வந்து நட்பு பாராட்டியவன் அடிப்படைவாதியா?.
8. தன்னுடைய பாஸ்டரின் முறைப் படி சங்கக் கூடுகைகள் நடக்கவில்லை என்பதற்காக தன் சொந்த (சங்கத்தை) வீட்டை விட்டு வெளியேறி விட்டு, அயல் வீட்டில் பிச்சை எடுத்தவன் அடிப்படைவாதியா? யார் வேண்டுமென்றாலும் தாங்கள் விரும்பும் முறையில் ஆராதனை நடத்தலாம் என்று வழி வகுத்தவன் அடிப்படைவாதியா?
9. அன்பளிப்பாகக் கொடுத்தவற்றை (Cloths) திரும்ப வாங்கியும், அன்பளிப்பாகப் பெற்றவற்றை திரும்பக் கொடுத்தும் தன் உணர்ச்சி வெளிப்பாட்டைக் (Emotional Reaction) காட்டுபவன் அடிப்படைவாதியா?
விரும்பியதெல்லாம் வாங்கிக் கொடுத்தவன் அடிப்படைவாதியா?
10. நான் பொதுவானவன் என்று சொல்லிவிட்டு, இருதயத்தில் கொடூரமாய் வாழ்பவன் அடிப்படைவாதியா? தமிழ் / சி.எஸ்.ஐ என்ற அங்கத்தில் இருந்தாலும் அன்பின் பிணைப்பில் வாழ்பவன் அடிப்படைவாதியா?
இது ஒரு சவுல் - தாவீது யுத்த களம்.....
சவுலின் இருதயம் மாற வேண்டும் என்ற ஜெபத்துடன் இந்த பதிவு...
0 Comments