Ad Code

தீய செயல்களுக்கு அடிமையாகாதே • Addiction of the Drugs • Sermon by Rebin Austin

1.ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: பெந்.திரு.நாள்.பின். 4-ம் ஞாயிறு (திரித்துவ 3)
தேதி: பச்சை
திருமறை பாடங்கள்: 
சங்கீதம்: 

2. திருவசனம் & தலைப்பு
    தீய செயல்களுக்கு அடிமையாகாதே 
நீதிமொழிகள் 23:31 ( பவர் திருப்புதல் ) மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப்பாராதே: அது மெதுவாய் இறங்கும். 
நீதிமொழிகள் 23:31 ( திருவிவிலியம் ) மதுவைப் பார்த்து, "இந்த இரசத்தின் சிவப்பென்ன! பாத்திரத்தில் அதன் பளபளப்பென்ன!" எனச் சொல்லி மகிழாதீர். அது தொண்டைக்குள் செல்லும்போது இனிமையாயிருக்கும்; 
 
 3. ஆசிரியர் & அவையோர்
 தாவீதின் குமாரன் சாலொமோன் ராஜா பெரும்பாலான நீதிமொழிகளின் ஆசிரியராக இருக்கலாம் என நம்பபடுகிறது. இஸ்ரவேல் மக்கள் நன்னெறிகளைக் கற்று நல்வாழ்வு வாழ எழுதப்பட்டது.
 
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை 
சாலமோனின் நீதிமொழிகள் கி.பி.971-க்கும் கி.பி. 931-க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது மற்றும் 25 முதல் 29 வரையிலான அதிகாரங்கள் கி.மு. 715 முதல் 686 வரையுள்ள எசேக்கியா இராஜாவின் ஆட்சிகாலத்தில் தொகுக்கப்பட்டது. எல்லா வகையிலும் மக்கள் விவேகமுள்ளவர்களாயும், நீதியுள்ளவர்களாயும், மாசற்றவர்களாயும் வாழ்வதற்கான நல்ல கருத்துக்களை போதிக்கிறது மற்றும் இளைஞர்களுக்கு எச்சரிப்பையும், ஞானிகள் நல்ல தலைவர்களாக விளங்க ஆலோசனைகளையும் கொடுக்கிறது. கடவுளுடைய ஞானத்தை அனுதின வாழ்வில் பயன்படுத்தவும், நல்லொழுக்கப் போதனைகளை கொடுக்கவும் இந்நூல் எழுதப்பட்டது. 

5. திருவசன விளக்கவுரை 
நீதிமொழிகள் 23:29-35 வரை உள்ள வசனங்கள் மதுபானத்தையும் அதன் விளைவுகளையும் பற்றி விளக்குகிறது. வசனம்-29 ஒரு விடுகதையைப் போன்ற கேள்விகளை உள்ளடக்கியுள்ளது. வசனம்-30 அந்த கேள்விகளுக்கு விடையளிக்கிறது. வசனம்-31 மதுபானத்தை குறித்த ஒரு கட்டளையோடு (Commandment) கூடிய (எச்சரிப்பையும்) அதன் விளைவுகளையும் எடுத்துக்காட்டுகிறது. வசனம்-33,34 மதுபானத்தினால் வரும் நேரடி (Personal Dangers of Wine) விளைவுகளை எடுத்துக்காட்டுகிறது.

வசனம்-31 மதுபானத்தின் வசிகரிக்கும் தன்மையைக் குறித்து எச்சரிக்கிறது. இந்த வசனம் குறிப்பாக மதுபானத்திற்க்கு அடிமையாவதைக் குறித்து எச்சரிக்கிறது. ஏனென்றால் அதனுடைய நிறம், தன்மை (பளபளப்பு) மற்றும் சுவை மெதுவாக மனிதனை மயக்கி (வசிகரித்தல்) அடிமைப்படுத்திவிடும். அதனுடைய தோற்றமே வசீகரிக்கும் தன்மையைக் கொண்டது அதனால் அதை பார்ப்பதையே தவிரிக்க வேண்டும் என்று எச்சரிக்கிறது; இங்கு, ஆசிரியர் உயர்வு நவிற்றி அணியை (Hyperbole) பயன்படுதுகிறார் அதனால், மதுபானத்தை பாராதே என்பது அதை குடிக்காதே என்று பொருள்படும்.

6. வாழ்வியல் & இறையியல்
இன்றைக்கு மதுபானத்திற்க்கு அடிமைப்பட்டிருக்கிற அநேகர் ஆரம்பத்தில் அதனுடைய சுவை எப்படி இருக்கும் என்கிற ஆர்வத்துடன்தான் முதலில் ஆரம்பித்திருப்பார்கள் ஆனால், மெதுவாக அவர்களை அறியாமலேயே அதற்க்கு அடிமையாயிருப்பார்கள். மதுபானம் அது வசிகரிக்கும் தன்மையைக் கொண்டது. அற்ப நேர சந்தோசத்திற்காக அதனோடு நாம் விளையாடக்கூடாது ஏனென்றால் அது நம்மை அடிமைப்படுத்திவிடும். அதனால் அதைப் பற்றி சிந்தையில்கூட நினைக்காமல் இருப்பது நல்லது என்று வேதம் நமக்கு எச்சரிக்கிறது.

7. அருளுரை குறிப்புகள் 
     தீய செயல்களுக்கு அடிமையாகாதே 
1. மனதை மயக்கும் மது / தீமைகள்
2. அடிமையாக்கும் மது / தீமைகள்
3. வாழ்வை சீரழிக்கும் மது / தீமைகள்


எழுதியவர்
திரு. தா. ரெபின் ஆஸ்டின்
சபை ஊழியர்
கல்லிடைக்குறிச்சி

Post a Comment

0 Comments