Ad Code

பெயர் சொல்லி அழைத்த கடவுள் √ God

பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர் இருமுறை பெயர் சொல்லி அழைத்த திருமறை மாந்தர்கள் 
-----------------
1. ஆபிரகாமே, ஆபிரகாமே
ஆதியாகமம் 22:11
அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான்.

2. யாக்கோபே, யாக்கோபே
ஆதியாகமம் 46:2
அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி: யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார்; அவன் இதோ, அடியேன் என்றான்.

3. மோசே, மோசே
யாத்திராகமம் 3:4
அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: *மோசே, மோசே* என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.

4. சாமுவேலே, சாமுவேலே
-----------------
*1 சாமுவேல் 3:10*
அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: *சாமுவேலே சாமுவேலே* என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்; சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்.

*5. மார்த்தாளே, மார்த்தாளே*
-----------------
*லூக்கா 10:41*
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: *மார்த்தாளே, மார்த்தாளே,* நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

*6. சீமோனே, சீமோனே*
-----------------
*லூக்கா 22:31*
பின்னும் கர்த்தர்: *சீமோனே, சீமோனே,* இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.

*7. சவுலே, சவுலே*
-----------------
*அப்போஸ்தலர் 9:4*
அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது:
*சவுலே, சவுலே,* நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.
-----------------
💐💐💐💐💐💐💐

Post a Comment

0 Comments