1.ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு : திரித்துவ ஞாயிறு
தேதி : 04/06/2023
வண்ணம் : வெள்ளை
திருமறைப்பாடங்கள்
பழைய ஏற்பாடு : எசேக்கியேல் 1 : 4− 28
நிருப வாக்கியம் : 2கொரிந்தியர் 13: 11 −14
சுவிசேஷ வாக்கியம் : மத்தேயு 28: 16 −20
சங்கீதம் : 98
2.திருவசனம் & தலைப்பு
நாங்கள் நம்பும் மூவொருவர்
யோவான் 15 : 26
( பவர் மொழிபெயர்ப்பு) பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும் , பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்.
(திருவிலியம்) தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்.அவர் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார்.
3. ஆசிரியர் & அவையோர்
இந்த நற்செய்தி நூலை எழுதியவர் , இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் யோவான் என்பவர் ஆவர்.முதல் தலைமுறை கிறிஸ்தவர்களுக்காக எழுதப்பட்டது.
4. எழுதப்பட்டக்காலம் & சூழ்நிலை
இந்த யோவான் நற்செய்தி நூல் கி.பி 70 இல் எருசலேமின் அழிவுக்கு பின்பும் பத்மு தீவுக்கு யோவான் நாடுகடத்தப்படுவதற்கு முன்பும் இந்த நற்செய்தி நூல் எழுதப்பட்டது.சுமார் கி.பி 80 −கி.பி 90 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டியிருக்கலாம் என்று வேத ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறது. எபேசு நகரில் எழுதப்பட்டியிருக்கலாம் என்பது கிறிஸ்தவ மரபு.சிலர் இயேசுவை குறித்து தவறான போதனைகளை போதித்தார்கள். எனவே யோவான் இயேசுவே மேசியா என்று எல்லா ஜனங்களும் நம்பவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்த நற்செய்தி நூலை எழுதினார்.
5. திருவசன விளக்கவுரை
யோவான் 15ம் அதிகாரத்தில் 18 − 26 வசனம் வரை சீஷரை எச்சரித்தார் அல்லது சீஷருக்கு அறிவுரை வழங்கினார். வசனம 26 இயேசு சீஷர்களிடம் கூறுகிறார். நான் பிதாவிடமிருந்து அனுப்பப்படுகிறவருகிறமாகிய ஆவியானவர் வரும்போது என்னைக்குறித்து சாட்சி கூறுவார் என்று சீஷர்களிடம் அறிவுரை கூறினார். பிதா , குமாரன் , பரிசுத்த ஆவியானவர் ஒருவரே நாங்கள் எப்பொழுதும் உங்களுடனே இருந்து உங்களை வழிநடத்திக் கொண்டு இருக்கிறோம் என்பதே மறைபொருளாக கூறுகிறார்.
6. இறையியல் & வாழ்வியல்
இந்த ஞாயிறு திரித்துவ ஞாயிறு .வேதத்தில் எந்த இடத்திலும் திரித்துவத்தை நேரடியாக கூறவில்லை..திரித்துவத்தின் கொள்கைகள் வேதத்தில் காணலாம் 26 ஆம் வசனத்திலும் மூவரை குறித்து சொல்லப்படுகிறது. மத்தேயு 28 : 19 ,20 பிதா குமாரன் பரிசுத்த ஆவி நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுங்கள். லூக்கா 3 : 22 பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் மேல் இறங்கினார் வானத்திலிருந்து( பிதாவிடமிருந்து) இருந்து ஒரு சத்தம் உண்டாகி நீர் என்னுடைய நேசகுமாரன் என உரைத்தது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூவரும் ஒருவரே மூன்று தன்மை உடையவர் எளிதில் அறிந்து கொள்ள ஒரு குடும்பத் தலைவரை எடுத்துக் கொள்வோம். குடும்பத் தலைவர் அவரது பெற்றோருக்கு மகனாயும் அவரது மனைவிக்கு கணவராகவும் அவரது பிள்ளைக்கு தகப்பனாகவும் இருக்க முடிகிறது .அதுபோலவே கடவுள் ஒருவரே ஆதிகாலத்தில் பிதாவானவராய் முற்பிதாக்களிடத்தில் இருந்தார். மனிதனை பாவத்திலிருந்து மீட்பதற்கு குமாரனாய் உலகத்தில் வெளிப்பட்டார். நம்மை நடத்த பரிசுத்த ஆவியானவராக இன்றும் ஜீவித்து கொண்டிருக்கிறார்.
திரித்துவத்தை பற்றி சிந்திப்பது நாம் அவரை அதிகமாய் அறிய உதவுகிறது. திரியேக கடவுள் தேவனுடைய அன்பினால் தெரிந்துக் கொண்டு கிறிஸ்துவின் கிருபையால் நம்மை இரட்சித்து பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தால் கடவுளோடு ஒன்றிணைத்தார். நாமும் நம்முடைய வாழ்வில் திரியேக கடவுளை அறிந்து உணர்ந்து அவருடைய குணங்களை பின்பற்றுவோம் .
7. அருளுரை குறிப்புகள்
நாங்கள் நம்பும் மூவொருவர்
1. தந்தையாம் கடவுள்
2. மைந்தனாம் இயேசு கிறிஸ்து
3. தேற்றரவாளனாம் தூய ஆவியார்
எழுதியவர்
திரு. மான்சிங் கிளிண்டன்
குருக்கல் லூத்தரன் இறையியல் கல்லூரி,
சென்னை.
0 Comments