1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: பெந்தேகோஸ்தே திருநாளுக்கு பின்வரும் எட்டாம் ஞாயிறு மற்றும் திருத்துவத்திருநாளுக்கு பின்வரும் ஏழாம் ஞாயிறு
தேதி: 23/07/2023
வண்ணம்: பச்சை
திருமறை பாடங்கள்:
உபாகமம் 10:8-15
யோவான் 21:15-19
1 தீமோத்தேயு 3:1-13
சங்கீதம் 99
2. திருவசனம் & தலைப்பு
ஆயர் திருப்பணி ORDAINED MINISTRY
அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல, கர்த்தருடைய சந்நிதியிலே நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவர் நாமத்தைக் கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார். உபாகமம் 10:8 (பவர் திருப்புதல்)
அந்நாளில் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சுமக்கவும், இந்நாள்வரை இருப்பது போல ஆண்டவர் திருமுன் நின்று பணிபுரியவும், அவருடைய பெயரால் ஆசி வழங்கவும், ஆண்டவர் லேவியின் குலத்தைத் தனித்து வைத்தார். உபாகமம் 10:8 (திருவிவிலியம்)
At that time the LORD set apart tribe of Levi to carry the Ark of the Covenant of the LORD, to stand before the LORD to minister and to pronounce Blessings in his name, as they still do today Deuteronomy 10:8
உபாகமம் அல்லது இணை சட்டம் என்ற தமிழ் வார்த்தை கிரேக்க வார்த்தையில் “ deuteronomion” என்று அழைக்க படுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் “Second Law” என்று பொருள். யூத மற்றும் கிறிஸ்தவ பாரம்பரிய படி வேதாகமத்தில் எபிரேய வார்த்தையில் தோரா என்று அழைக்கப்படுகிற முதல் ஐந்து புத்தகத்தகமும் (உபாகமம் ஐந்தாவது புத்தகம்) மோசேயினால் கடவுளின் வார்த்தையை இஸ்ரவேல் மக்களுக்காக எழுதப்பட்டது என்று சொல்லப்படுகிறது. (Matt. 19:8; Mark 12:26; John 7:19, 23; Acts 15:5; 1 Cor. 9:9; Heb. 9:19; 10:28). ஆனால் இறையியல் வல்லுநர்கள் இந்த ஐந்து புத்தகமும் Composition (JEDP) செய்யப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள்.
4. எழுதப்பட்ட காலம் மற்றும் சூழ்நிலை
உபாகமம் புத்தகத்தில் பெரும்பாலும் மோசே கடவுளிடம் இருந்து பெற்ற வார்த்தையாக இருக்கிறது. இது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்தை அடைவதற்கு முன்பதாக யோர்தானுக்கு இந்த பக்கத்தில் மோசே இளம் தலைமுறையான இஸ்ரவேல் மக்களை நோக்கி சொல்லப்பட்ட வார்த்தையாகும் (உபா 1:5). இதை வைத்து பார்க்கும் பொழுது உபாகமம் புத்தகம் கிமு 1300 ல் எழுதப்பட்டிருக்கலாம் என்று சில வேத வல்லுநர்கள் சொல்கிறார்கள் மற்றும் சில வேத வல்லுநர்கள் மோசேக்கு பின்பதாக பல நூற்றாண்டுகளாக கிமு 7 வரை இந்த புத்தகம் ஆலயத்தில் பாதுகாக்க பட்டு வந்ததாகவும் கிமு 621 ல் யூதாவின் ராஜாவாகிய யோசியா ராஜாவின் காலத்திற்கு முன் அப்போது இருந்த யூத மக்கள் ஆண்டவரின் கட்டளைகளையும் வார்த்தைகளையும் விட்டுவிட்டு கடவுளை எப்படி ஆராதிக்க வேண்டும் என்று தெரியாமல் அந்நிய தேவர்களை ஆராதித்தார்கள். ஆலயம் பராமரிப்பு அற்று கிடந்தது. ஆராதனை முறைமைகள் தெரியாமல் இருந்தார்கள். யோசியா ராஜா அரியணை ஏறுகின்ற பொழுது ஆண்டவரின் ஆலயத்தை பழுது பார்க்கின்றபோது இந்த உபாகமம் புத்தகம் பராமரிப்பற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது (2 Kings 22-1 to 23:30 and 2 Chronicles 34:1 To 35:27) என்றும் இந்த காலத்தில் இந்த புத்தகம் Update மற்றும் Edit செய்யப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். இதை உபாகமம் 1:1-5 மற்றும் 34:1-5 ஆகிய முகவுரை மற்றும் முடிவுரை வசனங்களை வாசிக்கின்ற போது அறிந்து கொள்ள முடியும்.
5. திருவசன விளக்கவுரை
‘Ordine’ என்கிற ஆங்கில வார்த்தைக்கு நியமிக்கப்படுதல் அபிஷேகிக்கபடுதல் அல்லது தேர்ந்தெடுக்கப்படுதல் என்று அர்த்தம் (Appointing, Consecrating, or Commissioning of persons for special service to the Lord and His people). அதாவது ஒரு நபரை கடவுளுக்காகவும் அவருடைய மக்களுக்காகவும் கடவுளின் திருப்பணியை செய்வதற்காக, கடவுளின் பெயரால் நியமிக்கப்படுகின்ற, அபிஷேகிக்கபடுதுகின்ற நிகழ்வு ஆகும் (Appointing, Consecrating, or Commissioning of persons for special service to the Lord and His people). கிறிஸ்தவ முறைப்படி பேராயர் தமது கைகளால் கடவுளின் நாமத்தினாலே தெரிந்தெடுக்கப்பட்ட நபரை ஆயராகவும், திருப்பணியாளராகவும், திருநிலை படுத்துகிறார். இந்த நிகழ்வு பரிசுத்தமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ஆசாரிய ஊழியம் என்பது ஒரு உன்னதமான பரிசுத்த ஊழியம் ஆகும். ஆரோன் குடும்பம் லேவி கோத்திரம் ஆகும். அந்த கோத்திரத்தார் மட்டுமே ஆண்டவருக்கு ஆசாரிய ஊழியம் செய்ய கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்.
உபாகமம் 10:8,9 ல் லேவி கோத்திரத்தார் ஆலயத்தில் ஆண்டவருக்கு பணி செய்வதற்காக பிரித்தெடுக்க பட்டவர்கள் என்றும் அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை சுமக்கவும், ஆண்டவருடைய சந்நிதானத்தில் நின்று ஆராதனை நடத்தவும், இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதிக்கவும் தெரிந்துகொள்ளப்பட்ட கோத்திரம் என்று அவர்களின் முக்கியத்துவம் பற்றியும் அவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் கடவுளுக்காக அர்ப்பணிக்க பட்டவர்கள், கடவுள் தான் அவர்களின் சுதந்திரம் ஆகும்.
6. இறையியல் மற்றும் வாழ்வியல்
உடன்படிக்கை பெட்டிக்குள் மன்னா, ஆணடவரின் கட்டளைகள் அடங்கிய கற்பலகைகள், மற்றும் ஆரோனின் கோல். இருக்கிறது (எபிரேயர் 9:4). இது கடவுள் எவ்விதமாக இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கொடுத்தார் என்பதையும். கடவுள் எவ்விதமாக அவர்களைப் போஷித்து வழிநடத்தினார் என்பதையும் தலைமுறை தலைமுறையாக நினைவுகூர வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறது. . ஆரோன் குடும்பத்தினர் அதை சுமந்து கொண்டு வரவேண்டும் அதாவது தலைமுறை தலைமுறையாக கடவுளின் மக்களுக்கு கடவுளின் செய்கைகளின் மகத்துவத்தையும், அவரின் வழிகாட்டுதலையும் போதிக்க வேண்டும் என்று ஆண்டவர் கட்டளை கொடுக்கிறார். இது ஆசாரிய ஊழியம் செய்கின்றவர்களின் பொறுப்பும் கடமையும் இருக்கிறது. ஆணடவரின் ஊழியத்திற்கு என்று பிரித்தெடுக்கப்பட்ட நாம் ஆண்டவரின் மீட்பின் பணியையும் அவருடைய வார்த்தைகளையும் தலைமுறை தலைமுறையாக சுமந்து கொண்டு வரவேண்டும். அதை நம்முடைய பிள்ளைகளுக்கும் நம்முடைய திருச்சபைக்கும் நல்ல பரிசுத்த முன்மாதிரிகளாக (1தீமோ 3) இருந்து கருத்தாய் போதித்து வழிநடத்த வேண்டும்.
இறைமக்கள் அனைவரும் கடவுள் நம்மோடு உடன்படிக்கை பண்ணியிருக்கிறார். நமக்கு நிலையான வாழ்வை தந்திருக்கின்றார் என்று நினைவுகூர்ந்து என்றென்றைக்கும் நம் அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யவும் அவரை விட்டு பின்வாங்காமல் அவரை மட்டும் தெய்வமாகவும் கொண்டிருக்க வேண்டும். நமக்கு போதித்து வழி நடத்தும் ஆயர்களையும், ஊழியர்களையும் மதித்து அவர்கள் சொல்லும் ஆண்டவரின் வார்த்தைகளைக் கேட்டு அதின் படி நடக்க வேண்டும். பிரதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்துதாமே நம்மோடு கூட இருந்து நம்மை ஆசீர்வதித்து நம்மை வழி நடத்துவாராக . ஆமென்.
7. அருளுரை குறிப்புகள்
ஆயர் திருப்பணி
1.பிரித்தெடுக்கப்பட்ட பணி (உபாகமம் 10:8,9)
(தனித்துவமானது, கடவுளுக்காக மட்டும்)
2. முன்மாதிரியான பணி (1 தீமோ 3)
(தூய்மை, உண்மை, சுயவெறுப்பு)
3. அர்ப்பணிக்கும் பணி (யோவான் 21:15-19)
(தியாகம், அன்பு, கரிசனை)
எழுதியவர்
G. ஜெபஸ்டின் BE, BD
சபை ஊழியர்,
பெருமாள்புரம் சேகரம், திருநெல்வேலி.
0 Comments