1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: திரித்துவ திருநாளுக்குப் பின்வரும் ஒன்பதாம் ஞாயிறு (கிறிஸ்து மறுரூபமான திருநாள்)
தேதி: 6/8/2023
வண்ணம்: பச்சை/ வெள்ளை
திருமறைப் பாடங்கள்:
சங்கீதம்:
2. திருவசனம் & தலைப்பு
திருமணம்: உடன்படிக்கையைக் கொண்டாடுதல் எபேசியர் 5:21
(பவர் திருப்புதல்) தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
(திருவிவிலியம்)கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள்.
3. ஆசிரியர் & அவையோர்
இந்த எபேசியர் கடிதத்தை அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியதாக கருதப்படுகிறது.எபேசு திருச்சபைக்கும் எபேசு பட்டணத்திலுள்ளவர்களுக்கும், எழுதினார்.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
இந்த கடிதத்தை பவுல் ரோம் பட்டணத்தின் சிறையில் இருக்கும் போது கிபி 62 இல் எழுதி இருக்கலாம் என்று வேத அறிஞர்களால் கருதப்படுகிறது. ஆண்டவர் தம் மக்களை எப்படி நடத்தியுள்ளார் என்பதையும் நாம் எப்படி அதை வாழ்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை கூறுகிறார். எபேசியில் உள்ள புதிய விசுவாசிகளுக்கு பவுல் அவர்களை உற்சாகம் படுத்தும்படியாக கடிதத்தை எழுதினார்.அவர்கள் தேவனுடைய அன்பையும் வல்லமையையும் அறிந்து கொள்ள விரும்பினார். அத்து
5. திருவசன விளக்கவுரை
பவுல் அப்போஸ்தலர் வசனம் 21-இல் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள பரஸ்பர உறவை குறித்து பேசுகிறார் . அதைத்தொடர்ந்து குடும்பத்தில் உள்ள ஒழுங்குகளை (Household Code) குறித்து பவுல் பேசுகிறார். 21 -ம் வசனமானது வசனம் 18 -ல் உள்ள தேவ ஆவியினால் நிறைந்து (verb) என்கிற வசனத்தை சார்ந்து நிற்கிறது. கடவுளுடைய ஆவியினால் நிறைந்த விசுவாசிகள் ஒருவருக்கொருவர் தங்களுடைய சொந்த விருப்பங்களை மற்றவர்களுடைய நன்மைக்காக விட்டுக் கொடுப்பார்கள். அப்படி விட்டு கொடுக்கும் பொழுது தான் பரஸ்பர உறவு ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை பவுல் இங்கு வலியுறுத்துகிறார். Submit ( கீழ்படிந்திருங்கள் ) என்கிற வார்த்தையை விசுவாசிகளின் பரஸ்பர உறவை குறிப்பதற்கு இங்கு தான் பவுல் முதன்முறையாக பயன்படுத்துகிறார்.
வசனம் 21 - ஐ அதற்கு பின்பு வருகிற வசனங்களோடு தொடர்பு படுத்தும் பொழுது குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கீழ்படிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. குறிப்பாக குடும்பத்தில் கணவன் மனைவி என்கிற படிநிலை (Hierarchy) இருந்தாலும் இருவரும் ( மனைவி மட்டுமல்ல) கிறிஸ்துவுக்குள் கீழ்ப்படிந்து ஒருவருக்கொருவர் முன்னுரிமை கொடுத்து கடவுள் உருவாக்கிய திருமணம் என்னும் உடன்படிக்கையை கொண்டாட வேண்டும்.
6. இறையியல் & வாழ்வியல்
இன்றைக்கு குடும்பம் என்னும் உடன்படிக்கை பேழையில் பலவிரிசல்கள் வர காரணரங்கள் என்ன? "தெய்வ பயம்" இல்லை. "ஒருவருக்கொருவர்" என்ற எண்ணமில்லை. "நான் ஏன் அவர் / அவள் பேச்சை கேட்க வேண்டும்?" என்ற Ego பிரச்சனை போன்ற காரணங்களை சொல்லலாம். கடவுள் தந்த பரிசாம் குடும்ப வாழ்வை அன்புடன் கொண்டாடுவோம்.
7. அருளுரை குறிப்புகள்
திருமணம்: உடன்படிக்கையைக் கொண்டாடுதல்
1. தெய்வபயம் இருந்தால் கொண்டாடலாம்
2. ஒருவருக்கொருவர் என்று வாழ்ந்தால் கொண்டாடலாம்
3. விட்டுக்கொடுத்து கீழ்படிந்தால் கொண்டாடலாம்
எழுதியவர்
திரு. தா.ரெபின் ஆஸ்டின்
சபை ஊழியர்
கல்லிடைக்குறிச்சி
0 Comments