Ad Code

இறை மக்களின் சாட்சி • Witness of God's People • CSI Diocese of Tirunelveli

 


1. ஞாயிறு குறிப்புகள்;

ஞாயிறு : பெந்தேகோஸ்தே திருநாளுக்கு பின்வரும் 17ம் ஞாயிறு

தேதி : 24/09/2023

வண்ணம் : பச்சை

திருமறைப்பாடங்கள்;

பழைய ஏற்பாடு − தானியேல் 3 : 12 −30

புதிய ஏற்பாடு − ரோமர் 12 : 9−21

நற்செய்தி பகுதி − லூக்கா 10 : 1−20

சங்கீதம் 15

2. திருவசனம் & தலைப்பு

இறைமக்களின் சாட்சி 

சங்கீதம் 15 :3 திருப்பாடல்கள்

(பவர் திருப்புதல்) அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்கு தீங்கு செய்யாமலும், தன் அயலான் மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.

(திருவிவிலியம்) தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் திங்கிழையார். தம் அடுத்தவரைப் பழித்துரையார்.

3.ஆசிரியர் & அவையோர்

சங்கீதம் புஸ்தகத்தில் 150 சங்கீதங்கள் உள்ளது. 150 சங்கீதங்களில் ஏறக்குறைய 73 சங்கீதங்களை தாவீது ராஜா எழுதியுள்ளார். கோராவின் புத்திரர் 10 சங்கீதங்களையும், ஆசாப் 12 சங்கீதங்களையும் எழுதியுள்ளனர். ஏனைய எழுத்தாளர்கள் சாலமோன் மோசே , ஏமான் , மற்றும் ஏத்தான் , எஸ்றா சில சங்கீதங்களை எழுதியிருக்கலாம். மேலும், சங்கீதங்களின் ஆசிரியர் யார் என அறியப்படாததாகவே இருக்கின்றன.

4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை

இந்த சங்கீதங்களில் மோசே எழுதிய சங்கீதம் தான் முந்தையதாக இருக்கும். மேலும் இது கிமு 1405 இல் இருந்திருக்கலாம்.தாவீது இயற்றியவை கிமு 1020 மற்றும் 975 க்கும் இடையில் தோன்றியிருக்கும்.ஆசாப் தாவீது காலத்தை சேர்ந்தவர். சாலொமோனின் சங்கீதம் கிமு 950 ல் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.ஏமான், ஏத்தான், எஸ்ரா சங்கீதங்கள் பாபிலோனிய சிறையிருப்பிற்கு பிறகு கிமு 586 மற்றும் கிமு 536 இடையில் எழுதிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பரிசுத்த வேதாகமத்தில் உள்ளபு த்தகங்களிலேயே மிகப்பெரிய புத்தகம் சங்கீதம் புத்தகம், மிகப்பெரிய அதிகாரம்சங்கீதம் 119 மற்றும் புதிய ஏற்பாட்டில் அதிக எண்ணிக்கையில் குறிப்பாகச் சொல்லப்படும், பழைய ஏற்பாட்டு புத்தகம் சங்கீத புத்தகம். பரிசுத்த வேதாகமத்தில் 1189 அதிகாரங்கள் உள்ளன. இவற்றில் மைய பகுதி சங்கீதம் 117. 

5.திருவசன விளக்கவுரை

15ம் சங்கீதத்தில் 6 நிபந்தனைகள் கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 3 ம் வசனத்தில் 3 நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்று புறங்கூறாதிருத்தல் - யாரையும் குறை சொல்லாதிருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் சண்டை பிரச்சனை ஏற்படுத்தாவனாய் இருக்க வேண்டும். 

இரண்டாவது தீங்கு செய்யாதிருத்தல். யாருக்கும் தீமை செய்யாமல் இருக்க வேண்டும் விசேஷமாக சொந்த சகோதரனுக்கும் தோழனுக்கும் தீங்கு செய்யாமல் இருக்க வேண்டும் மனிதனின் கோபத்தால் சில நேரங்களில் பிறருக்கு தீங்கு செய்து விடுகிறோம் எனவே யாருக்கும் தீங்கு செய்யாமல் இருக்க வேண்டும். 

மூன்றாவது இழிவாய் பேசாதிருத்தல் .ஒருவரை குறித்து ஒருவரிடம் இழிவாய் நிந்தையாய் பேசாதிருக்க வேண்டும். அநேக நேரங்களில் மனிதர்களாகிய நாம் என்ன செய்கிறோம் ஒருவரை குறித்து ஒருவர் இழிவாய் நிந்தையாய் பேசி வருகிறவர்களாய் இருக்கிறோம்.

அருமையான தேவனுடைய பிள்ளைகளே, எல்லாரும் நம்மை கவனிக்கின்றன. ஆகையால் நாம் சாட்சியான ஒரு வாழ்க்கை வாழ அழைக்கப்பட்டு இருக்கிறோம். புறங்கூற மாட்டா்கள். தீங்கு செய்யமாட்டார்கள். இழிவாய் பேசமாட்டார்கள் என்று அவர்கள் நம்மை பார்த்து சாட்சி சொல்ல வேண்டும். சாட்சியாய் வாழ்ந்து தேவனை மகிமைப்படுத்துவோம்.

6.இறையியல் & வாழ்வியல்

இன்றைய உலகில் கிறிஸ்தவர்கள் பெரும்பாலானோர் சாட்சி இல்லாத வாழ்க்கை தான் வாழ்கிறார்கள். நமக்குள்ளே ஒருவரை குறித்து ஒருவர் புறங்கூறி, தீங்கு செய்து, இழிவாய் பேசி வாழ்கிறார்கள்.ஒரு மனிதன் தவறு செய்துவிட்டால் அவனைக் குறித்து புறங்கூறி அவனுக்குத் தீங்கு செய்து அவனை இழிவாய் பேசுகிறோம். நாம் நியாயந்தீர்க்கிறோம். ஆனால் இது நமது வேலையில்லை இது கடவுளின் வேலை எனவே நாம் யாரைக் குறித்தும் புறங்கூறாமல், தீங்கு செய்யாமல், இழிவாய்ப் பேசாமல் வாழ வேண்டும். நம்மைக் குறித்து பிறர் சாட்சி கூற வேண்டும். இவர்கள் நல்லவர்கள் என்று இன்றைய சமுதாயத்தில் நம் சாட்சியாக வாழ்கிறோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம். கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

7. அருளுரை குறிப்புகள்

1.எல்லாரிடமும் மெய்யை பேசுவது சாட்சி.

2. எல்லாருக்கும் நன்மை செய்வது சாட்சி.

3.எல்லாருக்கும் நற்செய்தி அறிவிப்பது சாட்சி.


எழுதியவர்,

பே. மான்சிங் கிளிண்டன்

குருக்கல் லூத்தரன் இறையியல் கல்லூரி சென்னை.

Post a Comment

0 Comments