1. ஞாயிறு குறிப்புகள்:-
ஞாயிறு: பெந்தெகொஸ்தே திருநாளுக்கு பின்வரும் 2ம் ஞாயிறு
வணைம்: பச்சை
திருமறைப்பாடம்.
பழைய ஏற்பாடு : எஸ்தர் 4:1-8
புதிய ஏற்பாடு: பிலிப்பியர் 2: 25-30
நற்செய்தி பகுதி : மத்தேயு 10:37-42
சங்கீதம் 12
2. திருவசனம்:
எபிரெயர் 11:26 (பவர் திருப்புதல்)
இறையாட்சிக்காக இன்னல்களை ஏற்றல்-
இனிவரும் பலன் மேல் நோக்கமாயிருந்து எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும். நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.
[திருவிவிலியம்) ஏனெனில் தமக்கு கிடைக்கவிடுத்த கைம்மாறு ஒன்றையே கண்முன் இருத்தி, அவர். எகிப்தின் செல்வங்களைவிட மெசியாவின் பொருட்டு இகழ்ச்சியுறுவதே மேலான செல்வம் என்று கருதினார் .
3. ஆசிரியர் & அவையோர்:
இந்த நிருபத்தை அப்பொல்லோ எழுதியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.பவுலின் நிருபத்திற்கும் , எபிரெய நிருபத்திற்கும் இடையே ஒற்றுமைகள் இருப்பினும் , அதிகமான வேற்றுமைகள் காணப்படுவதால் பவுல் எழுதிருக்க முடியாது என்று பலரால் கருதப்படுகிறது. யாரால் எழுதப்பட்டது என்னும் கேள்விகளுக்குத் தெளிவான விடை காண இயலவில்லை.இந்த நிருபம் யூதத் கிறிஸ்தவர்களுக்காக எழுதப்பட்டது.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை:
இந்த எபிரெயர் நிருபத்தை கி.பி 70 ல் எருசலேம் தேவாலய அழிவுக்கு முன்னர் எழுதிருக்கலாம் என்று பலர் கூறுகின்றனர். ஆனால் பலர் இந்த நிருபம் கி.பி 80−85 கி.பி ஆம் ஆண்டிற்குள் எழுதியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் எருசலேம் தேவலாயம் அதன் வழிபாடுகளும் , கிறிஸ்துவின் செயல்களுக்கும், தன்மைக்கும் முன் அடையாளமாக மட்டுமே தரப்படுகின்றன. எனவே பலரால் அவ்வாறு கருதப்படுகிறது. இந்த நிருபம் யூதத் கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டது. பழைய ஏற்பாட்டில் தோய்ந்தவர்கள் , தங்கள் நம்பிக்கையை இழந்துவிடக்கூடிய ஆபத்தில் இருந்தவர்கள் அவர்கள் கிறிஸ்தவ நம்பிக்கையில் உறுதியாய் நில்லாமல் மீண்டும் யூதத் சமயத்திற்குத் திரும்ப நினைத்தார்கள். தாங்கள் பெற்றுக்கொண்ட நற்செய்தியை யூதமயமாக்க விரும்பினார்கள்..அதனால் இந்த நிருபம் எழுதப்பட்டது. இந்த நிருபத்தில் பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட யூதக்குருக்களாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டோர்,கிறிஸ்துவை விட்டு மீண்டும் யூதமுறைக்குத் திரும்பலாகாது. என்று கூறுகிறது. அப்படி செய்தால் வனாந்திரத்தில் கிளர்ச்சி செய்த இஸ்ரவேலர்கள் போல இவர்களும் தண்டிக்கப்படுவார்கள்.என எச்சரிக்கை விடுக்கிறது.இந்த எபிரெயர் நிருபம்.
5. திருவசன விளக்கவுரை
எபிரெயர் 11:26 ல் மோசேயின் வாழ்வை இந்த வசனம் கூறுகிறது . இந்த எபிரெயர் 11 விசுவாசிகளின் பட்டியல் என்று கூறலாம். இதில் மோசேயின் விசுவாசத்தை குறித்தும் , வாழ்வை குறித்தும் கூறப்படுகிறது. மோசே பார்வோனின் அரண்மனையில் 40வருடங்களாக வளர்ந்தான். ஆனால் அவன் இனிவரும் காலத்தை குறித்து நோக்கமாயிருந்து , அழிந்து போகக்கூடிய எகிப்தின் செல்வம் , அதிகாரத்தை விட இறையாட்சிகாக என் மக்களுடன் துன்பத்தை அனுபவிப்பேன். என்று இறையாட்சிக்காக இன்னல்களை ஏற்றுக்கொண்டார் மோசே.அதை நன்மையாக கருதுகிறேன் என்று கூறுகிறார். இறையாட்சி நித்தியமானது.அழிவில்லாதது அதை மோசே தெரிந்துக்கொண்டு இறையாட்சிக்காக இன்னல்கள், துன்பங்களை ஏற்றுக்கொண்டார். அவர் நினைத்திருந்தால் எகிப்தின் செல்வத்தில் வாழ்ந்திருக்க முடியும்.பார்வோனின் குமாரத்தியின் மகன் ஆனால் அது அழிந்துப்போகக் கூடியது என்று எண்ணி எபிரெய மக்களுடன் ஆண்டவருக்காக இன்னல்களை ஏற்றுக்கொண்டு , இறைமக்களை இறையாட்சிக்காக விசுவாசத்தின் வழியாய் நடத்தினார் மோசே.நாமும் இறையாட்சியை மேன்மைப்படுத்துவோம், இறையாட்சிக்கு ஆயத்தப்படுவோம், ஆயத்தபடுத்துவோம். இறைநாமம் மகிமைப்படுவதாக.
6. இறையியல் & வாழ்வியல்:;
நாம் இந்த உலகத்தில் உள்ளவைகளையே சிந்திக்கிறோம்,அதையே நாடுகிறோம். ஆனால் மறுமைக்குரிய வாழ்வு ஒன்று இருப்பதை மறந்துவிடுகிறோம். இறையாட்சி நித்தியமானது ,அழிவில்லாதது அதையே நாட ஆயத்தப்படுவோம். இறையாட்சியை அடைய கிறிஸ்துவுக்காக இன்னல்களையும் , துன்பங்களையும் ஏற்று இறையாட்சியை மலர செய்ய ஆயத்தப்படுவோம். இதுதான் ஆயிரவருட அரசாட்சி என்பதை எண்ணி அதை அடைய முயல்வோம் . கடவுளின் இறையாசி உங்களோடிருப்பதாக , ஆமென் !.
7. அருளுரை குறிப்புகள் :
1. இறைத்திட்டம் நிறைவேற இன்னலை ஏற்றல்(மொர்தெகாய்)
2. இறையாட்சிக்கு இறைமக்களை ஆயத்தப்படுத்த இன்னலை ஏற்றல்(எப்பாபிரோதீத்து)
3. இறையாட்சிக்காக சிலுவை என்னும் இன்னலை ஏற்றல் (சீஷன்)
0 Comments