Ad Code

மனதுருக்கத்தின் அன்பும் குணமாக்குதலும் • Medical Sunday • CSI Diocese of Tirunelveli

1. ஞாயிறு குறிப்புகள் 
ஞாயிறு: பெந்.திரு.பின்.20 ம் ஞாயிறு 
தேதி: 15.10.2023
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்: ஏசா:42: 1-9, யாக்கோபு:5: 13-18, லூக்கா:10:25-37 & சங்கீதம்: 103

2. திருவசனம் & தலைப்பு
            மனதுருக்கத்தின் அன்பும் குணமாக்குதலும்
           லூக்கா : 10.34 (பவர் திருப்புதல்) 
 கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
          லூக்கா : 10.34 (திருவிவிலியம்) 
அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். 

3. ஆசிரியர் & அவையோர்
பரிசுத்த லூக்கா நற்செய்தி நூலின் ஆசிரியர் அந்தியோகியா பட்டணத்தை சார்ந்த லூக்கா என்பவர். இவர் ஒரு மருத்துவர். பரி. பவுலுடன் சேர்ந்து சுவிஷேசம் அறிவித்தவர் ( II தீமோ: 4:11 ). 

4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
இந்நூல் கி.பி. 70-க்குப் பின்பு, அந்தியோகியா & ரோமாபுரி பட்டணங்களிருந்து எழுதப்பட்டது. 
பரி. லூக்கா இந்நூலை தேவாலய ஊழியம் & நற்செய்தியை அறிவிக்கும் நோக்கத்தோடு எழுதியுள்ளார். இவர் கிரேக்கக் கலாச்சார ஈடுபாடு கொண்டவர். புற இனக்கிறிஸ்தவர்களுக்கென்றே இந்நூல் எழுதப்பட்டுள்ளதால் இந்நூலில் எபிரேயம் கையாளப்படவில்லை. 

5. திருவசன விளக்கவுரை
இயேசுவின் உவமைகள் எல்லாவற்றிலும் சிறந்தவை. ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகம் முழுவதும் உவமைகளை விரும்புகிறது. அவை அனைத்தும், தத்துவ மற்றும் தார்மீக ஞானத்தின் சாராம்சம் மற்றும் இதுவரை எழுதப்பட்ட மிகவும் செல்வாக்கு மிக்க சொற்கள். 

லூக்கா: 10:30, 33 ஆம் வசனத்தில் கள்ளர் கையில் அகப்பட்ட மனிதனுக்கு உதவி செய்ய யாரும் முன் வராத சூழ்நிலையில் ஒரு சமாரியன் மனதுருகி உதவிசெய்கின்றதை இயேசு கிறிஸ்து உவமையாக கூறுகிறார். 

பொதுவாக சமாரியர்கள் யூதர்களால் தாழ்த்தப்பட்ட மக்களாகக் கருதப்பட்டனர், ஏனெனில் அவர்கள் யூதர்கள் அல்லாதவர்களுடன் திருமணம் செய்து கொண்டனர் மற்றும் அனைத்து சட்டங்களையும் கடைப்பிடிக்கவில்லை. எனவே, யூதர்களுக்கு அவர்களுடன் எந்த தொடர்பும் இருக்காது. காயமடைந்தவர் யூதரா அல்லது புறஜாதியா என்பது தெரியாது, ஆனால் அது சமாரியனுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை, அவர் மனிதனின் இனத்தையோ மதத்தையோ கருத்தில் கொள்ளவில்லை. நல்ல சமாரியன் உதவி தேவைப்படும் ஒரு நபரை மட்டுமே பார்த்தார். 

லூக்கா:10:34 ல்,
அவனுடைய காயங்களில் எண்ணெய்யும், திராட்சரசமும் வார்த்து என்கிற வார்த்தை குணப்படுதலின் அனுபவத்தை குறிக்கிறது ( ஏசா:1:6, மாற்கு: 6:13 & யாக்கோபு:5:14). இவை பெரும்பாலும் காயங்களைக் குணப்படுத்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டன. 

காயமடைந்த மனிதனிடம் சமாரியனின் பொறுப்புணர்வு அவனை உதவி செய்ய நிர்ப்பந்தித்தது. சமாரியன் தனது நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பதை கவனத்தில் கொள்வோம். அவர் திரும்பி வந்து அந்த மனிதனைப் பார்க்கவும் எண்ணினார். இது அவரது உள்ளன்பை வெளிப்படுத்துகிறது. 

6. இறையியல் & வாழ்வியல்
சமாரியன் வாழ்வில் காணப்படுகிற, நம்பிக்கை, நல்மனசாட்சி, பொறுப்புணர்வு & உள்ளன்பு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. 
உலகளாவிய மருத்துவத்துறை வணிக நோக்கோடு செய்யப்படும் இக்காலகட்டத்தில், குணமளிக்கும் திருப்பணியானது நம்முடைய திருச்சபையின் உன்னதமான பணிகளில் ஒன்றாக கருதப்பட்டு, மிஷன் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இன்னறக்கு நம்முடைய மிஷன் மருத்துவமனைகளில் உள்ள வாசகம் நம்மை புத்துயிர் அடைய செய்கிறது. WE DRESS THE WOUND; JESUS HEALS IT. நாங்கள் காயங்களுக்கு மருத்திட்டுக் கட்டுகிறோம்; சுகமளிக்கிறவரோ கிறிஸ்து இயேசு.  

தனிமனித வாழ்வில் நம்பிக்கையூட்டி, குணமளிக்கும் திருப்பணி (மருத்துவ) வளந்தோங்க ஜெபிப்போம்.

7. அருளுரை குறிப்புகள்
 மனதுருக்கத்தின் அன்பும் குணமாக்குதலும்
         1. பிறர் மீது மனதுருக்கம்
         2. பிறருக்கு உதவி செய்தல்

எழுதியவர்
திரு. ஜோயல் ராஜா சிங்
சபை ஊழியர்
KTC நகர் சேகரம் 

Post a Comment

0 Comments