SMC Lenten Meditation 2024
தியானம்: 5/ 40 - நேச குமாரன்
எழுதியவர். செல்வன். டெ. டேனிஷ்
தலைப்பு : நேசகுமாரன்/நேசன்
மத்தேயு 3.17 அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
வசனங்கள் :
மத்தேயு 3:17, 12:18, 17:5,
மாற்கு 1:11, லூக்கா 3:22
தலைப்பின் அர்த்தம்:
நேசகுமாரன் என்றல் ஆங்கிலத்தில் Beloved son என்று பார்க்கிறோம். மிகவும் அன்பு செலுத்தப்பட்ட ஒரு மகன் என கூறலாம்.மேலே சொல்லப்பட்ட வசனங்களில் பிதா இயேசு கிறிஸ்துவை தம் நேசகுமாரனாக ஜனங்களுக்கு தெரியப்படுத்துகிறார்
விளக்கவுரை:
• தன் நேச குமாரனிலும் அதிக நேசத்தை பிதா நம் மீது வைத்தோரோ?
ஆதியாகமம் 22:2 ல் பிதா ஈசாக்கை ஆபிரகாமுடைய நேசகுமாரன் என்று கூறுகிறார். அவருக்கு 8 குமாரர்கள் இருந்தாலும் ஈசாக்கை தான் அதிகம் நேசித்தார். அப்படி அன்பு கூர்ந்த ஈசாக்கை பிதா தகனபலி கொடுக்க சொன்னபோது சற்றும் யோசிக்காமல் தன் நேசகுமாரனை பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தார்.
அது போல பிதாவும் தம்முடைய நேசகுமாரனாகிய இயேசுவை நமக்காக இந்த உலகத்திற்கு அனுப்பினார். நமக்காகவும் நம்முடைய பாவங்களுக்காகவும் நேசகுமாரனை அனுப்பினார். அவர் நமக்காக பாடு அனுபவிக்கும்படியாய் ஒப்புக்கொடுத்தார். ஆதாம் செய்த பாவத்திற்கு பரிகாரமாக தன சொந்த குமாரன் என்றும் பாராமல் நமக்காக இயேசுவை தந்தார்.
முடிவுரை:
நாமும் நாம் அதிகம் நேசிக்கிற காரியங்களை பிதாவுக்கு ஒப்புக்கொடுப்போம். நாம் நேசிக்கும் காரியங்களை தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும்போது தேவன் நம்மை இன்னும் அதிகம் நேசிக்கிறார். ஆகவே, இந்த உலகம் மீதும் அதன் பொருட்கள் மீதும் வைத்திருக்கிற நேசத்தை விட்டுவிட்டு அவருடைய ராஜ்யத்திற்காக செயல்படுவோம். ஆமென்.
0 Comments