Ad Code

மனித குமாரன் • Son of Man • SMC Lenten Meditation 2024

SMC Lenten Meditation 2024
தியானம்: 6/ 40 - மனித குமாரன்
எழுதியவர்: செல்வன். ஸ். கிளிண்டன் 

தலைப்பு: மனுஷ குமாரன்
மாற்கு 10:45 அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். 

தலைப்பின் அர்த்தம்:
இயேசு கடவுளாக இருந்தாலும், பரிசுத்த ஆவியினால் மரியாள் கற்பவதியாகி ஒரு குமாரனாக உலகத்திற்கு கொடுக்கப்பட்டார். மனுஷ குமாரன் Ben Adam என்று எபிரேய பாஷையில் கூறப்படுகிறது. 

வசன இருப்பிடங்கள்: 
மத்தேயு 8.20; மாற்கு 10.45
லூக்கா 6.22; யோவான் 3.13

விளக்கவுரை
1. அவர் மனிதராகவே வாழ்ந்தார்:
அவரும் நம்மைபோல உலகத்தில் மனிதனாக வாழ்ந்தார். ஏனெனில் அவரை சிலுவையில் அறைவதற்கு முன்பாக அவரைப்பிடிக்கும் போது அவருடைய சீசர்கள் ஒரு வேலைக்காரனுடைய காதை வெட்டும் போது அவர் அப்பொழுது சொன்னதாவது நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? 
(மத்தேயு 26:53). அவருக்கு அதிகாரம் இருந்தாலும் அவர் அதை தவறாக பயன்படுத்தாமல், நல் மனிதனாக செயல்பட்டார்.

2. அவர் மனிதரைப் போல் பாடுகளை அனுபவித்தார்:
மனிதனுக்கு வரும் எல்லா துன்பத்தையும் அவர் தனது வாழ்ந்த நாட்களில் அனுபவித்தார். அவர் கடவுளாக இருந்த போதிலும் மனிதனின் துன்பத்தை அனுபவித்தார்.அவர் தனது சிலுவை பயனத்தின் போது முழுவதும் மனிதன் மனிதனால் வரும் துன்பத்தையும் அவர் ஏற்றுக்கொண்டார்.அவர் எதற்காக பாடுகளை ஏற்றுக்கொன்டார் நம்முடைய பாவங்களுக்காக ஒரே பலியாக ஒப்புகொடுக்கப்பட்டார் (லூக்கா 24:7).

3. அவர் நம் எல்லோருக்கும் ஒரு முன்மாதிரி: 
அவர் நம்மை போல மனிதனாக வாழ்ந்து நம்மை போல பாடுகளை அனுபவித்தாலும் அவர் பரிசுத்தமாக வாழ்ந்து காட்டினார். ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள் (யோவான் 13:14)
இந்த வசனத்தின் அடிப்படையில் அவர் தாழ்மையை வெளிப்படுத்தினார்.

முடிவுரை:
கடவுளே தம்மைத் தாழ்த்தி நல் மனிதராக வாழ்ந்தார். ஆனால் மனிதராக பிறந்த நாமோ, மனிதத்துவம் இல்லாதவர்களை போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் மனித வாழ்க்கையில் நமக்கு முன்மாதிரியை கற்றுத் தந்த இயேசுவின் வாழ்வை பின்பற்றி வாழ்வோம். ஆமென். 

Post a Comment

0 Comments