SMC Lenten Meditation 2024
தியானம்: 7/ 40 - மனித குமாரன்
எழுதியவர்: திரு. ஸ். நிக்ஸன் ஐசக் ராஜா
தலைப்பு:தாவீதின் குமாரன்
மத்தேயு 22:42 கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.
வசன இருப்பிடங்கள்:
மத்தேயு: 1:20
மத்தேயு: 12:23
மேற்கு : 12:35
லூக்கா : 20:41
தலைப்பின் அர்த்தம்
இயேசு எப்படி தாவீதின் குமாரனாக இருப்பார்? தாவீது ஏறக்குறைய 1000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்திருக்க இயேசு எப்படி தாவீதின் குமாரனாக இருப்பார்...? கிறிஸ்து (மேசியா) தாவீதின் வித்து என்கிறதான நாத்தான் தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக இயேசு இருந்தார் .
(2 சாமுவேல் 7:12-16).
விளக்கவுரை:
மரியாள் யோசேப்பை மணக்க நிச்சயிக்கப்பட்டிருந்த போது அவள் பரிசுத்த ஆவியானவரால் கர்ப்பவதியாகிறாள். அதை அறிந்த யோசேப்பு அவளைத் தள்ளி விட மனதாயிருந்தான். அப்போது யோசேப்பிடம் தேவ தூதன் ஒருவன் சொப்பனத்தில் உண்மையை கூறுகிறான். அப்போது தேவதூதன் யோசேப்பை, தாவீதின் குமாரனாகிய யோசேப்பே என்று அழைத்து , அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். (மத்தேயு 1:21)
ஜனங்களின் பார்வை:
இயேசுவை "ஆண்டவரே, தாவீதின் குமாரனே" என்று பலமுறை, விசுவாசத்தினால், இரக்கம் வேண்டி அல்லது விடுதலை தேடும் மக்களால் அழைக்கப்பட்டது.
அழைத்தவர்கள் :
1) பிசாசினால் தனது மகள் துன்புறுத்தப்பட்ட நிலையில் ஒரு பெண் (மத்தேயு 15:22).
2)வழியருகே இருந்து இரண்டு குருடர்கள் (மத்தேயு 20:30).
3)பர்திமேயு என்கிற ஒரு குருடன் (மார்க் 10:47) ஆகியோர் தாவீதின் குமாரனே என்று உதவிக்காக கூப்பிட்டனர்.
வருகையை எதிர்பார்த்தார்கள்:
பரிசேயர்களும், மக்கள் இயேசுவை "தாவீதின் குமாரன்" என்று அழைத்ததின் அர்த்தம் என்ன என்பதை புரிந்து கொண்டனர். ஆனால் தங்கள் சொந்த பெருமை மற்றும் வேதத்தைப் பற்றிய புரிதல் இல்லாததால் குருடர்களாக இருந்தனர். அதனால் இங்கே அவர்கள் வாழ்நாள் முழுவதும் காத்திருந்த மேசியா வந்திருக்கிறார் என்று உணர்ந்து கொள்ளவில்லை.
அறியாமையில் எழுந்த கோவம் :
பரிசேயர்கள் மேசியா இவர் தான் என்று அறியாமல் அவருக்கு மரியாதை செலுத்தாமல் தேவ தூஷனம் செய்கிறார் என்று கொலை செய்ய முறைப்பட்டார்கள். (மத்தேயு 21:15; லூக்கா 19:47)
முடிவுரை:
மேசியா இப்படி தான் இருப்பார் என்று தமக்கு வேண்டியபடி சிந்தனை செய்து ஒரு வட்டத்திற்குள் வாழ்ந்த வேதபாரகர் மற்றும் பரிசேயர்கள் போல் இல்லாமல்
நமக்காக நம் மீட்புக்காக மனிதனாக தாவீதின் சந்ததியில் பூமிக்கு வந்து தம்முடைய இரத்தம் சிந்தி மீட்ட இம்மானுவேலாகிய கிறிஸ்து இயேசு நம்முடன் இருக்கிறார் என்று உணர்ந்து இந்த லெந்து காலத்தை அவருக்காக செலவிடவோம். ஆமென்.
0 Comments